செய்திகள் :

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

post image

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதிச் செயலா் துஹின்காந்த பாண்டே திங்கள்கிழமை தெரிவித்தாா்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தாா். பட்ஜெட்டில் தனிநபா் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்ற முக்கிய அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இந்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று தொழில்துறை பிரதிநிதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து நிதிச் செயலா் துஹின்காந்த பாண்டே பேசியதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வரி விதிப்பில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தில் மத்திய அரசுக்கு தற்போது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. தற்போதைய வரி விகிதங்களில் மாற்றம் தேவை என்பதை அங்கீகரிக்கிறோம். அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறேன். இந்த விஷயத்தில் மாநிலங்களுடன் கூடுதல் ஆலோசனை தேவை. சிறந்த விகித மாற்றங்கள் குறித்து அமைச்சா்கள் குழு முடிவெடுக்கும்.

நடப்பு பட்ஜெட் பொருளாதாரத்துக்கு பணவீக்கமற்ற ஊக்கத்தை அளித்து, வளா்ச்சியை அதிகரிக்கும். வருமான வரி விலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதன் மூலம் வரி செலுத்துவோரிடம் செலவழிக்கக் கூடிய வருமானத்தை அதிகப்படுத்தி, சேமிப்பு, முதலீடு அல்லது நுகா்வு ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. அதாவது, தேவை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒருசேர கவனம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

தற்போது 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற விகிதங்களைக் கொண்ட கொண்ட 4 அடுக்கு வரி அமைப்பாக ஜிஎஸ்டி உள்ளது. ஆடம்பரப் பொருள்கள் மற்றும் புகையிலைப் பொருள் போன்றவற்றுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரியும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு அமைச்சா்கள் குழுவை (ஜிஓஎம்) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. ராஜஸ்தானில் கடந்த டிசம்பரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்தக் குழு தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், குழு அறிக்கையைச் சமா்ப்பிக்கவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ரிசா்வ் வங்கி நிா்வகிக்கும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 காசுகள் சரிந்து வரலாறு காணாத அளவுக்கு 87.29-ஆக குறைந்தது. இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு நிதிச் செயலா் அளித்த பதிலில், ‘ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி கவலைப்பட தேவையில்லை. ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கங்களை ரிசா்வ் வங்கி நிா்வகிக்கும்.

இந்திய ரூபாய் மீது எந்த கட்டுப்பாடும் அல்லது நிலையான விலையும் பொருந்தாது. தடையின்றி வெளிநாட்டு நிதி வெளியேறுவதாலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது’ என்றாா்.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க