"இந்த மண்ணின் பூர்வகுடிகளான வன்னியர்களும், பட்டியலின மக்களும் ஒன்றுசேர வேண்டும்"...
ஜூ.வி மெகா சர்வே: `இழுபறியில் நயினார் நாகேந்திரன்?' - விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி நிலவரம்!
தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது.
வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.
தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.
சாத்தூர் தொகுதி சர்வே முடிவு:
அதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் கடற்கரை ராஜ், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், நா.த.க-வில் ஆனந்தராஜா, த.வெ.க-வில் அஜித் போட்டியிடுகிறார்கள். கடற்கரை ராஜின் மனைவி ஒன்றிய சேர்மன் ஆக பணியாற்றியது, கூட்டணிக் கட்சிகள், நாயக்கர் சமூக வாக்குகள் ப்ளஸ்.
உள்கட்சிப் பூசல் மைனஸ். முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய நயினார் நாகேந்திரனுக்கு வெளியூர் விருந்தாளி என்ற முழக்கம் மைனஸ். சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க-வில் இசக்கி ராஜா பிரிக்கும் கணிசமான வாக்குகள் நயினாரை கவலையில் தள்ளுகிறது. இரண்டு பெரிய கட்சிகளுக்குமே உட்கட்சிகளில் இருந்து தேர்தல் பணி செய்ய சிலர் முன்வராததால் இழுபறி நிலவுகிறது.
இதுபோல விருதுநகர் - ராமநாதபுரம் - தூத்துக்குடி மாவட்டங்களில்... சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன், அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருச்சுழியில் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கீதா ஜீவன் உள்ளிட்டவர்களின் தொகுதிவாரியான முழு சர்வே ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது.
அதனை விரிவாக படிக்க, க்ளிக் செய்யுங்கள்.!












