செய்திகள் :

ஜெம் வீரமணி வழக்கு: "திமுக-வும், தவெக-வும் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல்..!"- வானதி சீனிவாசன்

post image

"ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்" என்று பாஜக முன்னாள் மகளிர் தேசிய அணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகளும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.

 வீரமணி
வீரமணி

கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி பல ஏழைச் சிறுமிகளிடம் அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தவறான முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இத்தகைய சம்பவங்களுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனைகளே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தினை வழங்கும்.

குறிப்பாக, இந்த போக்சோ வழக்கை முடித்து வைக்க காவல்துறை ஏற்கெனவே முயன்றதாகக் கூறப்படும் நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே மீண்டும் விசாரணை தீவிரமடைந்திருப்பது பல கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர்களுக்கு உதவியவர்கள், உண்மைகளை மறைக்க அல்லது விசாரணையைத் திசைதிருப்ப முயன்றவர்கள் என யாரேனும் இருந்தால், அவர்களது பங்கும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். மேலும் FIR -ல் பெயர் சேர்க்காமல் இருக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது திடுக்கிட வைக்கிறது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதி செய்து, அவர்கள் அச்சமின்றி சாட்சியமளிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மேலும் இவ்விவகாரத்தில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்.

இவ்வழக்கில் தமிழக அரசு துரிதமாகவும் வெளிப்படையாகவும் விசாரணையை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும். தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர்... மேலும் பார்க்க

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" - வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கு... மேலும் பார்க்க

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீக்கு மேல் சென்றால் அபராதம்!' - அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, `... மேலும் பார்க்க

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.... மேலும் பார்க்க

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐ... மேலும் பார்க்க