கந்த சஷ்டி விரதம் : 8 லிங்கங்கள்; 4 உற்சவர்கள்; அற்புத தகவல்கள் - திருச்செந்தூரி...
ஜோக்ஸ் - கனவு 25

“கை கால்ல மாவுக்கட்டு போட்டிருக்குற மாதிரி தலைவருக்கு சிலை வெச்சுருக்காங்களே எதுக்கு..?”
“சிலை தத்ரூபமாக வேணுமுன்னு சொல்லியிருந்தோம்..!”

“தலைவர் வீட்டு முன்னாடி 25 அடி கட்-அவுட் வெச்சு ஒரே கொண்டாட்டமா இருக்கே... என்ன விஷயம் ?”
“தலைவரோட முதல்வர் கனவுக்கு இது 25-வது வருஷமாம்!”
- எம்.பி.தினேஷ்

“எங்க கட்சி மீட்டிஙகில் கிடைக்கிற காற்றோட்டமான இடவசதி எதிர்க்கட்சி மீட்டிங்கில் உங்களுக்குக் கிடைக்குமா... கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்”
- மலர்சூர்யா

“தலைவர் ஏன் அந்தச் சட்டமன்ற உறுப்பினரைக் கூப்பிட்டு டோஸ் விடுறார்?’’
``கட்சி மாறினதுகூடத் தெரியாம, எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது பெஞ்ச்சைத் தட்டிட்டாராம்?"
- ப.சோமசுந்தரம்

















