செய்திகள் :

ஜோக்ஸ்..! - 2

post image
ஜோக்ஸ்..!

“கொஞ்ச நாளா தூக்கமே இல்லை!”

“டாக்டரைப் பார்க்க வேண்டியதுதானே?”

“பார்த்தேன்... ‘கரன்ட் பிரச்னைக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டார்!”

- சு.அருண் பிரகாஷ்

ஜோக்ஸ்..!

“டாக்டர் கொஞ்ச நாளா என் புருஷனுக்குக் காது கேக்க மாட்டேங்குது?”

“சட்டசபை நிகழ்வுகளை ஹெட்போன் போட்டுப் பார்க்கச் சொல்லாதீங்க. சீக்கிரம் குணமாகிடும்.”

- ஆதவன்

ஜோக்ஸ்..!

“அந்த ஆட்டோக்காரர் முன்னாள் எம்.எல்.ஏ-ன்னு எப்படிச் சொல்றீங்க?”

“ ‘சட்டசபைக்கு ஆட்டோ இலவசம்’னு எழுதி வெச்சிருக்காரே!”

- எம்.பி.தினேஷ்

ஜோக்ஸ்..!

“தலைவர் மேடையில் பேசுவதாக சில போலி வீடியோக்கள் வருவதாக அறிகிறோம். தலைவரின் இமேஜை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும், நாங்கள் எதிர்க்காமல் விட மாட்டோம்!”

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்.

ஜோக்ஸ்..! - 1

ஜோக்ஸ்..!“என்னய்யா... நான் பேசலாம்னு இருந்த பாயின்ட்ஸையெல்லாம், எனக்கு முன்னாடி நம்ம கட்சிக்காரங்களே பேசிட்டாங்க?!““நீங்க பாயின்ட்ஸ் எடுத்த அதே ‘சாட்ஜிபிடி’லதான், அவங்களும் எடுத்திருக்காங்க தலைவரே!“- ... மேலும் பார்க்க