'நான் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பாஜக-வின் ‘துரந்தரா'?' - விமர்சனங்களுக்கு அண்...
ஜோக்ஸ்..!
ஓவியங்கள்: எம்.ஜெயசூர்யா

“மந்திரியாரே, எதிரி அரசன் நம் மீது நேரடியாகப் போர்
தொடுக்காமல் சைபர் அட்டாக் செய்கிறானாமே?”
“ஆமாம் மன்னா... நமது அரண்மனை வைஃபை பாஸ்வேர்டை 12345 என்று வைத்ததுதான்
தவறாகிவிட்டது!”
- ஆதவன்

“நம்ம கூட்டணிக்குப் பொருத்தமான ஒரு பேர் சொல்லுய்யா...”
“ ‘சந்தர்ப்பவாதக் கூட்டணி’ன்னு வெச்சா நல்லா இருக்குமா தலைவரே!”
- சு.அருண் பிரகாஷ்

``என் தொகுதி மக்களுக்கு நான் நாணயஸ்தனாக இருப்பேன் என்பதை...”
“ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை தலைவர் எவ்வளவு சூசகமா
சொல்றாரு பார்த்தியா?’’
- செ.ந.வடிவேல்

“ஒரு மணி நேரம் முந்தி வந்துருந்தா பேஷன்ட்டைக் காப்பாத்தியிருக்கலாம்!”
“எப்படிச் சொல்றீங்க சிஸ்டர்?’’
``எங்க டாக்டர் அப்போ வந்திருக்க மாட்டார்!”
- எஸ்.முகம்மது யூசுப்

“இடைத்தேர்தல்ல நாம ஜெயிச்சுடுவோமாய்யா?”
“ஜெயிச்சுடுவோமாங்கிற தப்பான சந்தேகம் ஏன் வந்தது தலைவரே?!”
- எஸ்.கோபாலன்

“நான் என்ன சவால்விட்டாலும் எதிர்க்கட்சியினர் சரிக்குச் சரியா பதில் சொல்றாங்களே எப்படி?”
“ரெண்டு பேருக்கும் ஒரே ஸ்கிரிப்ட் ரைட்டர் தலைவரே!”
- அம்பை தேவா

“நாம ஆட்சியைப் பிடிச்சதே, இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் போட்டுதானேய்யா...”
“உண்மைதான் தலைவரே. அதுக்காக நம்ம கட்சியில ‘இன்ஸ்டா ரீல்ஸ் பரப்பு அணி’ன்னு ஒரு அணியை உருவாக்குறதெல்லாம் நல்லாவா இருக்கு!”
- சு.அருண் பிரகாஷ்

“எனக்கு ஞாபகமறதி அதிகமாகிடுச்சு டாக்டர்!”
“எப்படிச் சொல்றீங்க?”
“ரீல்ஸ் எடுக்க நினைச்சு செல்ஃபி எடுத்துடுறேன்!”
- எஸ்.முகம்மது யூசுப்.
















