செய்திகள் :

புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் - வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

post image

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவுக்கு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு ஆசிரமங்கள் இருக்கின்றன.  அதன்படி கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் இருக்கும் பிடதி என்ற பகுதியில் இருக்கிறது நித்தியானந்தாவின் ஆசிரமம்.

அங்கிருந்த பெண் சீடர்கள் சிலர், நித்தியானந்தா தங்களைப் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் புகாரளித்தனர். அதையடுத்து கடந்த 2010-ல் பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை, துரோகம், ஏமாற்றுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்தது கர்நாடக காவல்துறை.

அதேபோல குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள அவரது ஆசிரமத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்திச் சென்று பணியில் வைத்திருப்பதாக பெற்றோர்கள் சார்பில் காவல்துறைக்குப் புகார்கள் சென்றன.

நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ

அதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு குழந்தைகள் நலப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த குஜராத் காவல்துறை, அந்த ஆசிரமத்தின் நிர்வாகிகளைக் கைது செய்தது.

இந்த வழக்குகளின் பிடியாணைகளுக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், நித்தியானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது இந்திய அரசு. அதற்கு அடுத்த ஆண்டே கைலாசா என்ற தனி நாட்டை ஏற்படுத்தியிருப்பதாக வீடியோ மூலம் அறிவித்த நித்தியானந்தா, அந்த நாட்டின் குடியுரிமைக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.

தனி நாட்டை உருவாக்கிய நித்தியானந்தா தன்னுடைய சொந்த நாடான இந்தியாவுக்கு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த மாதம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்த நித்தியானந்தாவின் சீடர்கள், `புதுச்சேரியிலுள்ள நித்யானந்தா தியான பீடத்திற்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதில் கலந்துகொள்வதற்காக வரும் நித்தியானந்தாவுக்கு நீங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். அத்துடன் நித்தியானந்தா புகைப்படத்துடன் கூடிய ஒரு புத்தகத்தையும் வழங்கினர்.

அதையடுத்து, `சரி, அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று அவர்களிடம் தெரிவித்தாராம், முதல்வர் ரங்கசாமி. இந்த நிலையில்தான், புதுச்சேரி ஏம்பலம் பகுதியிலுள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், ஏம்பலம் தொகுதியின் எம்.எல்.ஏவும் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.

வீடியோவில் அமைச்சர் நமச்சிவாயம்

அந்த வீடியோவில் அமைச்சர் நமச்சிவாயத்தையும், எம்.எல்.ஏ மோகன்தாசையும் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்கின்றனர் நித்யானந்தாவின் சீடர்கள்.

அதையடுத்து நித்தியானந்தா வீடியோவில் தோன்றி அவர்களிடம் பேச ஆரம்பித்ததும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், எம்.எல்.ஏ மோகன்தாசும் நித்தியானந்தாவை பவ்யமாக கையெடுத்துக் கும்பிடுகின்றனர்.

தொடர்ந்து பேசும் நித்தியானந்தா, ``கைலாசா புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கும் புதுச்சேரியின் மாண்புமிகு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களையும், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் அவர்களையும் மற்றும் எல்லோரையும் வணங்கி வரவேற்கிறேன். நீங்கள் கைலாசா புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு மிகுந்த நன்றியும், சந்தோஷமும். ஆனந்தத்துடன் உங்களை வரவேற்கின்றேன். நீங்கள் வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்கிறார்.

``இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவார்..!" - அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பட்டா வழங்கும் அரசு நிகழ்வு நடைபெற்றது. இதில், அமைச்சர் பர்வேஸ், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய... மேலும் பார்க்க

`விடுமுறை நாளிலும் அரசு விழாக்கள்'- புலம்பும் புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்; அமைச்சர் பர்வேஸ் விளக்கம்

"பண்டிகை காலங்கள்ல தொடர்ந்து 3, 4 நாள் விடுமுறை கிடைச்சா, எங்க சொந்த ஊருக்குப் போய் பொண்டாட்டி, பிள்ளைகளோட நிம்மதியா இருக்கணும்னுதானே நினைப்போம்? ஆனா, அமைச்சரின் நிகழ்ச்சிகளால அந்த சந்தோஷமே காணாமல் போ... மேலும் பார்க்க

Chennai : 'எச்சரித்த முதல்வர் தரப்பு; மழையில் இறங்கிய தவெக அமைச்சர்கள்!' - பின்னணி என்ன?

அக்டோபர் 17 ஆம் தேதி இரவு சென்னையில் குறுகிய நேரத்தில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்திருந்தது. பல பகுதிகளிலும் மழை வெள்ளம் தேங்கியிருந்தது. அந்த சமயத்தில் மழைக்காக சென்னைக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமி... மேலும் பார்க்க

'ஞானேஷ் குமாருக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக போலீஸ்!' - என்ன காரணம்?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் SIR க்கு எதிராகவும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி, இடதுசாரி மாணவ அமைப்புகள் மூலம் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

``10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" - டிடிவி தினகரன் காட்டம்

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி சிறுமியின் பிறந்தநாள் கொண்ட... மேலும் பார்க்க

வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி; இன்னொருவர் மிகக் கவலைக்கிடம்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அப்புக்கல் சாலையில் தனியார் திருமண மண்டபத்துக்கு பின்புறமாக `ஸ்ரீ சப்தகிரி’ என்ற பெயரில் பட்டாசு உற்பத்தி குடோன் அமைந்திருக்கிறது. இன்று காலை 10:30 மணியளவில் 2 ஆண்கள், 6 பெ... மேலும் பார்க்க