செய்திகள் :

``10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" - டிடிவி தினகரன் காட்டம்

post image

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் 12-ம் தேதி அதிகாலை சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுமியைத் தேடும் பணிக்காக 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட போலீஸார் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுமி மாயம்
சிறுமி மாயம்

எனினும், சிறுமி மாயமாகி 10 நாள்கள் கடந்தும் இதுவரை அவரைப் பற்றிய உறுதியான தகவலோ, முக்கிய தடயமோ கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``செஞ்சி அருகே சிறுமி மாயமாகி பத்து நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்காமல் திணறும் தமிழ்நாடு காவல்துறை – குற்றங்களைக் கையாளுவதில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, தற்போது அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதற்கான ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டு நடுப்பட்டு பகுதியில் கடந்த 11ஆம் தேதி மாயமான 7 வயது சிறுமியைக் காவல்துறையினரால் பத்து நாட்கள் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. சிறுமி மாயமானது தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் தேடியும் சிறிய அளவிலான துப்புகூடக் கிடைக்காமல் காவல்துறையினர் திணறிக்கொண்டிருப்பது, காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

விஜய்
விஜய்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஏவல்துறையாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினர் மீதும் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் தேவையற்ற வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் தவெக அரசால், தமிழகக் காவல்துறை படிப்படியாகச் செயலிழந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுமட்டுமல்லாது, விழுப்புரம் அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமாகிப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் எனத் தமிழகத்தில் சிறுமிகள் தொடர்பான கடத்தல் மற்றும் மாயமாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இவற்றின் பின்னணியில் ஏதேனும் கும்பல்கள் செயல்படுகின்றனவா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுமி மாயமானது தொடர்பான விசாரணையில் தமிழகக் காவல்துறை திணறி வருவதாலும், அடுத்தடுத்த சிறுமிகள் கடத்தல் தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையிலும், இவ்விசாரணைகளை சிபிசிஐடி (CBCID) அல்லது சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்க வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'ஞானேஷ் குமாருக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக போலீஸ்!' - என்ன காரணம்?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் SIR க்கு எதிராகவும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி, இடதுசாரி மாணவ அமைப்புகள் மூலம் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி; இன்னொருவர் மிகக் கவலைக்கிடம்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அப்புக்கல் சாலையில் தனியார் திருமண மண்டபத்துக்கு பின்புறமாக `ஸ்ரீ சப்தகிரி’ என்ற பெயரில் பட்டாசு உற்பத்தி குடோன் அமைந்திருக்கிறது. இன்று காலை 10:30 மணியளவில் 2 ஆண்கள், 6 பெ... மேலும் பார்க்க

வால்பாறை: கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்... சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந... மேலும் பார்க்க

நாதக கார்த்திகா கைது: "நயினாருக்கு எதிராகக் கைது நடவடிக்கை எடுத்தார்களா?" - கனிமொழி கேள்வி

திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நாதக வேட்பாளர் கார்த்திகா கைது குறித்து பேசிய கனிமொழி, "வேண்டுமென்றே கால்புணர்ச்சியில் செய்திருக்கக்கூடிய அத்துமீறல்தான் இந்தக... மேலும் பார்க்க

'150 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானது, ஆனால் நிதி.!' - அன்புமணி சொல்வதென்ன?

125 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 25 நாள் வேலை வழங்க ரூ.9,192 கோடி தேவை என்றும், அரசு ஒதுக்கிய ரூ.100 கோடியால் பயனில்லை என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர... மேலும் பார்க்க

France Protests: தெருக்களில் தீப்பிழம்புகள் – திண்டாடும் 9 நாடுகள்... அலறும் ஐரோப்பா கண்டம்!

​அமைதியின் சொர்க்கமாகவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மனித உரிமைகளின் உலகளாவிய கேந்திரமாகவும் வர்ணிக்கப்பட்டு வந்த ஐரோப்பியக் கண்டம், தற்போது இதுவரை காணாத உக்கிரமான வன்முறைகளாலும் கொந்தளிப்புகளாலும் போர்... மேலும் பார்க்க