செய்திகள் :

Doctor Vikatan: முன்பக்க மண்டையில் முடி உதிருதா... இந்த 9 விஷயங்களில் கவனமா இருங்க!

post image

Doctor Vikatan: என் வயது 33. இப்போதே எனக்கு முன்பக்கத் தலையில் முடி உதிர்வு ஆரம்பித்துவிட்டது. எனக்குத் தெரிந்த பெண்கள் சிலருக்கும் இந்தப் பிரச்னை இருப்பதைப் பார்க்கிறேன்.

பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய முன்னந்தலை முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவோ, நிறுத்தவோ முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா.
சருமநல மருத்துவர் பூர்ணிமா.

பெண்களுக்கு ஏற்படும் இதுபோன்ற முன்பக்க முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதற்கு முன், அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். அது அழற்சி (inflammatory cause), ஹார்மோன் குறைபாடு (hormonal cause) அல்லது உணவுப் பழக்கம் (dietary habits) என எந்தக் காரணத்தால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.

சிறுவயதில் இருந்தே தலைமுடியை இறுக்கமாக இழுத்துப் பின்னுவது, கிளிப்புகள் போடுவது, இழுத்து வாரி ரிப்பன் கட்டுவது போன்ற பழக்கங்கள் பல பெண்களிடமும் இருப்பதைப் பார்க்கலாம். இதனால் ஏற்படும் 'டிராக்ஷன் அலோபீஷியா' (Traction Alopecia) முடி உதிர்வை உண்டாக்கும் என்பதால், இந்தப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

முன்பக்க முடி உதிர்வுக்கு பிசிஓஎஸ் (PCOS) உள்ளிட்ட ஹார்மோன் சமநிலையின்மையும் (Hormonal Imbalance) மிக முக்கியமான காரணம். ஒழுங்கற்ற மாதவிடாய் (irregular periods), உடல் எடை அதிகரிப்பு (weight gain), இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) போன்ற அறிகுறிகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வது அவசியம்.

இரும்புச்சத்து (Iron) மற்றும் வைட்டமின் பி12 (B12) போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் (Nutritional Deficiencies)  இருந்தால் அவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.

கடுமையான டயட் (crash diets) முறைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்து, அதிக புரதச்சத்து (protein) நிறைந்த சீரான உணவை எடுத்துக்கொள்வது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் (irregular periods), உடல் எடை அதிகரிப்பு (weight gain), இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) போன்ற அறிகுறிகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வது அவசியம்.

முடி மெலிதாகத் தொடங்கும் போதே, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அவரது பரிந்துரையின் பேரில் பெப்டைடு சீரம்களைப் (Peptide serums) பயன்படுத்தத் தொடங்கலாம்.

மருத்துவர் பரிந்துரைத்தால் மினாக்ஸிடில் (Minoxidil) மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சிக்கு உதவும்.

முடியின் வேர்க்கால்கள் (follicles) அடைபட்டு வழுக்கை (balding) ஏற்படுவதற்கு முன்பே அதைத் தடுத்துப் பராமரிக்க வேண்டும்.

தலைமுடியை மிகவும் மென்மையாகக் கையாள வேண்டும். அதற்கு மென்மையான ஷாம்பூ மற்றும் பிஹெச் (pH) சமநிலை கொண்ட கிளென்சர்களைப் பயன்படுத்துவது நல்லது.

இவற்றையெல்லாம் செய்த பிறகும் முடி உதிர்வு தொடர்ந்தால், சரும மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

டாக்டர் பூர்ணிமா:

சென்னை அண்ணாநகரில் Dr. Poornima's Clinic - House of Dermatology & Aesthetics-ன் உரிமையாளர்.  சருமநலத் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரைகள்... சைவ உணவுக்காரர்கள் எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன... இது மீனிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறதா... சைவ உணவுக்காரர்கள் இதைச் சாப்பிடலாமா... இம்மாத்திரையின் பயன்கள் என்னென்ன?-அ. யாழினி பர்வதம் சென்னை பதில... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்ணாடி... எத்தனை ஆண்டுகளுக்கொரு முறை மாற்ற வேண்டும்?

Doctor Vikatan:பரிசோதனை செய்து கண்ணாடி அணிபவர்கள் அந்தக் கண்ணாடியை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்...? மீண்டும் எப்போது கண் பரிசோதனை செய்ய வேண்டும்... கூடவே, கண்ணாடியைப் பராமரிக்கும் முறைகளையும் விளக்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: 40 வயதில் சர்க்கரை நோய்... குதிகாலில் வலி... காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: எனக்கு 40 வயதாகிறது. டைப் 2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) உள்ளது. கடந்த சில மாதங்களாக எனது இடது குதிகாலின் பின்புறத்தில் வலி இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறா... மேலும் பார்க்க

Doctor Vikatan: கேப்ஸ்யூல் விழுங்க முடியாதவர்கள் உள்ளே உள்ள மருந்துப்பொடியை மட்டும் சாப்பிடலாமா?

Doctor Vikatan: தண்ணீருக்கு பதிலாக பால் குடிக்கும்போது அத்துடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா... வெந்நீருடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா? வயதானவர்களுக்கு கேப்ஸ்யூல் மாத்திரைகளை விழுங்க முடியாத நிலையில... மேலும் பார்க்க

Doctor Vikatan: தைராய்டு, கொலஸ்ட்ரால், சுகர்... அதிகமானால் இதெல்லாம் நடக்கும்... அலெர்ட்!

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாகதைராய்டு, கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய் என எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன.இவை அதிகமானால்ஒருவருக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்... அதற்கான தீர்வுகள் என்ன?பதில் சொல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: டிரெண்டாகும் மெக்னீசியம் சப்ளிமென்ட்... அனைவருமே எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: மெக்னீசியம் சப்ளிமென்ட் எடுப்பது குறித்து சமீபகாலமாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அது எதற்கானது... யார், எப்போது, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதில் நிறைய வகைகள் உள்ளனவா? உணவின் மூலம்... மேலும் பார்க்க