செய்திகள் :

Doctor Vikatan: கண்ணாடி... எத்தனை ஆண்டுகளுக்கொரு முறை மாற்ற வேண்டும்?

post image

Doctor Vikatan: பரிசோதனை செய்து  கண்ணாடி அணிபவர்கள் அந்தக் கண்ணாடியை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்...? மீண்டும் எப்போது கண் பரிசோதனை செய்ய வேண்டும்... கூடவே,  கண்ணாடியைப் பராமரிக்கும் முறைகளையும் விளக்க முடியுமா...?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்

கண்ணாடி அணிபவர்கள் அனைவரும் கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை (Eye Checkup) செய்துகொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றின் பயன்பாட்டினால், இன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கண்ணாடி பயன்படுத்தும் சூழல் உள்ளது.

உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப விழிப்பந்தும் (Eyeball) வளர்வதால், சிறுவயதினருக்கு ஒவ்வோர் ஆண்டும் கண்ணாடி பவரில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே, லேசிக் (LASIK) போன்ற ஒளிவிலகல் அறுவை சிகிச்சைகளை (Refractive Surgeries) 21 வயது அடைந்த பிறகே செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய 'டயாபட்டிக் ரெடடினோபதி' (Diabetic Retinopathy), கண அழுத்த நோய் (Glaucoma), மற்றும் லென்ஸ் மாற்றத்தால் ஏற்படும் 'கண்புரை பாதிப்பு' (Cataract) போன்ற பாதிப்புகள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ள இது அவசியம். நோய்களைக் கண்டறிவதுடன், பவர் மாறுபாட்டிற்கு ஏற்ப கண்ணாடியை மாற்றவும் இது உதவும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்ய வேண்டும்.

கண்ணாடியைப் பயன்படுத்தாத போது அதை எப்போதும் அதற்குரிய  பெட்டியில்தான் (Case/Box) வைக்க வேண்டும். கண்ணாடியை சட்டை அல்லது கைக்குட்டையால் (Handkerchief) துடைக்கக் கூடாது. லென்ஸ்களைத் துடைப்பதற்கென்றே உள்ள பிரத்யேக மைக்ரோஃபைபர் துணியை (Microfiber Cloth) மட்டுமே பயன்படுத்த வேண்டும். லென்ஸ் கிளீனிங் சொல்யூஷன் (Lens Solution) பயன்படுத்திச் சுத்தம் செய்யலாம்.

சொல்யூஷன் இல்லாத பட்சத்தில், சுத்தமான தண்ணீரை (Running Water) பயன்படுத்திக் கழுவலாம். இது கீறல்கள் (Scratches) விழுவதைத் தடுக்கும். லென்ஸ்கள் உருகிப் பாழாகாமல் இருக்க, அதிக வெப்பம் உள்ள பகுதிகளுக்கு அருகில் கண்ணாடியை வைக்கக் கூடாது.
கண்ணாடியைக் கழற்றும் போதும், அணியும் போதும் இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும். ஒரே கையால் இழுத்துக் கழற்றினால் கண்ணாடியின் ஃபிரேம் லூசாகவாய்ப்புள்ளது. சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் லென்ஸ்களில் கீறல்கள் விழுவதைத் தடுத்து, கண்ணாடியின் ஆயுளை அதிகப்படுத்தலாம்.

டாக்டர் விஜய் ஷங்கர்:
சென்னை, ஆர்.ஏ.புரம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் சங்கர் ஐ கேர் கிளினிக் வைத்து நடத்துகிறார். இத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: 40 வயதில் சர்க்கரை நோய்... குதிகாலில் வலி... காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: எனக்கு 40 வயதாகிறது. டைப் 2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) உள்ளது. கடந்த சில மாதங்களாக எனது இடது குதிகாலின் பின்புறத்தில் வலி இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறா... மேலும் பார்க்க

Doctor Vikatan: கேப்ஸ்யூல் விழுங்க முடியாதவர்கள் உள்ளே உள்ள மருந்துப்பொடியை மட்டும் சாப்பிடலாமா?

Doctor Vikatan: தண்ணீருக்கு பதிலாக பால் குடிக்கும்போது அத்துடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா... வெந்நீருடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா? வயதானவர்களுக்கு கேப்ஸ்யூல் மாத்திரைகளை விழுங்க முடியாத நிலையில... மேலும் பார்க்க

Doctor Vikatan: தைராய்டு, கொலஸ்ட்ரால், சுகர்... அதிகமானால் இதெல்லாம் நடக்கும்... அலெர்ட்!

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாகதைராய்டு, கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய் என எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன.இவை அதிகமானால்ஒருவருக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்... அதற்கான தீர்வுகள் என்ன?பதில் சொல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: டிரெண்டாகும் மெக்னீசியம் சப்ளிமென்ட்... அனைவருமே எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: மெக்னீசியம் சப்ளிமென்ட் எடுப்பது குறித்து சமீபகாலமாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அது எதற்கானது... யார், எப்போது, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதில் நிறைய வகைகள் உள்ளனவா? உணவின் மூலம்... மேலும் பார்க்க

Doctor Vikatan: கேட்டராக்ட் செய்த கண்களில் அரிப்பு; அதே மருத்துவரிடம்தான் சிகிச்சை பெற வேண்டுமா?

Doctor Vikatan: கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். பூச்சி பட்டதாலா அல்லது தூசி விழுந்ததால என்று தெரியவில்லை. கடந்த இரண்டு நாள்களாகக் கண்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. லேசாகச் சிவந்தும் காணப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கால்களை மடக்கும்போது வரும் சத்தம்... மூட்டுப் பிரச்னையாக இருக்குமா?

Doctor Vikatan:சமீபகாலமாக என்னுடைய வலது கால் மூட்டில் மடக்கும்போது எப்போதும் நெட்டி எடுப்பது போன்று சத்தம் கேட்கிறது... இதற்கு என்ன காரணமாக இருக்கும்... மூட்டுப் பிரச்னையாக இருக்க வாய்ப்பு உண்டா... மர... மேலும் பார்க்க