செய்திகள் :

போதைப்பொருள்: ``தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?" - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

post image

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள 'மெத்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் தவெக நகரச் செயலாளர் பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.

பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?

கட்சியா இல்லை Narcos (போதைப்பொருள் கடத்தல் காரர்கள்) கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``அன்புச் சகோதரர் விஜய்-க்கு பணிவான வேண்டுகோள்" - லெஜெண்ட் சரவணன்

ஆயுதப் பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் லெஜெண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுதப் பூஜை விழாவை கொண்டாடினார். அதைத் தொடர்ந்து, உரையாற்றினார், அப்போது, ``இந்தத் தருணத்தில், மறைந்த இசையமைப்பாளர் திர... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: ``உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்" - முதல்வர் விஜய் வாழ்த்து

நவ​ராத்​திரி நிறை​வாக கொண்​டாடப்​படும் சரஸ்​வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்​டிகைகளை முன்​னிட்டு தமிழக மக்​களுக்கு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். முதல்வர் விஜய் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில... மேலும் பார்க்க

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை - கொந்தளிக்கும் சி.பி.எம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் என்ற தனியார் தாதுமணல் கம்பெனியிடம் இருந்து மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் ​முதல்வராக இருந்த சமயத்தில் பினராயி விஜயன் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அதை ஹவாலா பணமாக ம... மேலும் பார்க்க

``தொடரும் கொலைகள்: நான் அப்போதே சொன்னேன்" - ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் காவல்துறை தள்ளாடுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அலட்சியத்தால் தொடர... மேலும் பார்க்க

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' - துரை வைகோ

திருச்சி, மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்.பி துரை வைகோ திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,"திருச்சி மெயின் கார்டு கேட் அருகே ரயில்வே மேம்பால பணிகள் ... மேலும் பார்க்க

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது; கடுமையான நடவடிக்கை உண்டு' - இம்மானுவேல் மக்ரோன்!

விலைவாசி உயர்வு, மோசமான கல்விச் சூழல் போன்றவற்றைக் கண்டித்து பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது ஆங்காங்கே கலவரமும், கடைகளில் சூறையாடலு... மேலும் பார்க்க