செய்திகள் :

Doctor Vikatan: கேப்ஸ்யூல் விழுங்க முடியாதவர்கள் உள்ளே உள்ள மருந்துப்பொடியை மட்டும் சாப்பிடலாமா?

post image

Doctor Vikatan: தண்ணீருக்கு பதிலாக பால் குடிக்கும்போது அத்துடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா... வெந்நீருடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா? வயதானவர்களுக்கு கேப்ஸ்யூல் மாத்திரைகளை விழுங்க முடியாத நிலையில் உள்ளே உள்ள  மருந்தை மட்டும் கொடுப்பது சரியா? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

மாத்திரைகளைப் பால் அல்லது  பால் பொருள்களுடன் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் பால் அல்லது  பால் பொருள்களுடன் எடுப்பது மாத்திரையின் உறிஞ்சும் தன்மையைக் குறைத்துவிடலாம். அதன் வேலைத்திறனை மாற்றிவிடக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. எனவே, தண்ணீரில் குடிக்க வேண்டிய மருந்துகளைக் கண்டிப்பாகத் தண்ணீரில் மட்டுமே குடிக்க வேண்டும்.  பாலில் எடுக்கக் கூடாது.

அளவுகடந்த சூடாக இல்லாமல், வெதுவெதுப்பான தண்ணீரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறில்லை. அளவுக்கதிக சூடான நீரில் மாத்திரைகளை உட்கொள்ளும்போது, சில நேரங்களில் அந்த மருந்துகளின் குணாதிசயங்கள்  மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

கேப்ஸ்யூல் மருந்துகளின் முக்கிய வேலையே, அது இரைப்பையில் கரையாமல் நேரடியாகக் குடலுக்கு மருந்தைக் கொண்டு சேர்ப்பதுதான்.  இரைப்பையில் உள்ள சக்திவாய்ந்த அமிலம், மருந்தின் வீரியத்தை மாற்றிவிடும் என்பதால், கேப்ஸ்யூல் மாத்திரையை உடைத்துச் சாப்பிடக் கூடாது. கேப்ஸ்யூலின் மேல் உறைதான் அந்த அமிலத்திடமிருந்து மருந்தைப் பாதுகாத்து, அது சரியாகக் குடலுக்குச் சென்று வேலை செய்ய உதவுகிறது. எந்த இடத்தில் கரைய வேண்டும் என்பதைக் கணக்கிட்டுதான் கேப்ஸ்யூலின் தடிமன் (thickness) மற்றும் அதன் தயாரிப்பு முறைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

அளவுகடந்த சூடாக இல்லாமல், வெதுவெதுப்பான தண்ணீரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறில்லை.
அளவுகடந்த சூடாக இல்லாமல், வெதுவெதுப்பான தண்ணீரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறில்லை.

எனவே, கேப்ஸ்யூலைப் பொடிசெய்து விழுங்குவது சரியான விஷயம் கிடையாது. அதை பாலுடனோ அல்லது வெந்நீருடனோ குடிப்பதும் தவறானது.  அதை அப்படியே முழுங்க வேண்டும். சந்தேகம் இருக்கும்பட்சத்தில், வேறு முறையில் உட்கொள்ளலாமா என்பதை மருத்துவர் அல்லது மருந்தாளுநரிடம் (Pharmacist) கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மற்றபடி, கேப்ஸ்யூலில் உள்ள பவுடரை வெளியே எடுத்து விழுங்குவது அதன் வேலைத்திறனைக் குறைக்கும் அல்லது அதன் செயல்திறனையே இழக்க வைத்துவிடும்.



டாக்டர் அருணாசலம்:

32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான டாக்டர் அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார். பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.



உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: தைராய்டு, கொலஸ்ட்ரால், சுகர்... அதிகமானால் இதெல்லாம் நடக்கும்... அலெர்ட்!

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாகதைராய்டு, கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய் என எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன.இவை அதிகமானால்ஒருவருக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்... அதற்கான தீர்வுகள் என்ன?பதில் சொல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: டிரெண்டாகும் மெக்னீசியம் சப்ளிமென்ட்... அனைவருமே எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: மெக்னீசியம் சப்ளிமென்ட் எடுப்பது குறித்து சமீபகாலமாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அது எதற்கானது... யார், எப்போது, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதில் நிறைய வகைகள் உள்ளனவா? உணவின் மூலம்... மேலும் பார்க்க

Doctor Vikatan: கேட்டராக்ட் செய்த கண்களில் அரிப்பு; அதே மருத்துவரிடம்தான் சிகிச்சை பெற வேண்டுமா?

Doctor Vikatan: கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். பூச்சி பட்டதாலா அல்லது தூசி விழுந்ததால என்று தெரியவில்லை. கடந்த இரண்டு நாள்களாகக் கண்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. லேசாகச் சிவந்தும் காணப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கால்களை மடக்கும்போது வரும் சத்தம்... மூட்டுப் பிரச்னையாக இருக்குமா?

Doctor Vikatan:சமீபகாலமாக என்னுடைய வலது கால் மூட்டில் மடக்கும்போது எப்போதும் நெட்டி எடுப்பது போன்று சத்தம் கேட்கிறது... இதற்கு என்ன காரணமாக இருக்கும்... மூட்டுப் பிரச்னையாக இருக்க வாய்ப்பு உண்டா... மர... மேலும் பார்க்க

Doctor Vikatan: வயது குறைவு: ஆனாலும் தாம்பத்ய உறவில் நாட்டமில்லையா?இதெல்லாம்தான் காரணங்கள்!

Doctor Vikatan: என் வயது 29. காதல் திருமணம்தான் செய்துகொண்டேன். திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. அதற்குள் எனக்கு தாம்பத்ய உறவில் விருப்பமில்லாமல் போய்விட்டது. இதற்கு என்ன காரணம்... ஆர்வத்தைத் தூண்ட சிக... மேலும் பார்க்க

மெட்டல் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை - அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் புதிய சாதனை!

திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில், அக்டோபர் 7 ஆம் தேதி மெட்டல் ஸ்டென்ட் (Metallic Stent) பொருத்தாமல், மருந்து பூசப்பட்ட பலூன் (#Drug-Coated Balloon – DCB) மூலம் இதய ரத்தக் குழாய் அடைப... மேலும் பார்க்க