செய்திகள் :

Chennai Rain: 'முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்!

post image

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை ரிப்பன் பில்டிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ்

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகளை கடந்த இரண்டு மாதங்களாக செய்து கொண்டிருக்கிறோம். நேற்று பெய்திருப்பது வழக்கமான மழை இல்லை. வடகிழக்குப் பருவமழை சமயத்தில் சென்னையில் மொத்தமாக 69 செ.மீ மழைதான் பெய்யும். ஆனால், நேற்று மாலை 6 மணியிலிருந்து இரவுக்குள் 35.2 செ.மீ மழை பெய்துள்ளது. மேக வெடிப்பு என சொல்கின்றனர். அதைப் பற்றிய தகவல் கிடைத்தவுடன் பகிர்வோம்.

இப்போதைக்கு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் 1913 என்ற எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள்.

அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ்

15000 மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இருக்கிறார்கள். முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மழை குறித்த அப்டேட்டை கேட்டுக் கொண்டே இருக்கிறார். இவ்வளவு பெரிய மழை பெய்திருப்பதால் அடுத்த 10 நாட்களுக்கு நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். பழைய கட்டடங்களில் வசிக்கும் மக்களை தற்காலிக தங்கும் இடங்களுக்கு மாற்றும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறோம். சென்னையிலுள்ள பழமையான ஹவுஸிங் போர்டுகளின் புள்ளிவிவரங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் மழை பெய்யும் போது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பாதுகாப்புக்காக மின் தடையையும் செய்வோம். மக்கள் எதுவாக இருந்தாலும் 1913 என்ற எண்ணை அழைக்கவும்.' என்றார்.

Chennai Rain : 'வரலாறு காணாத மழை!' - சென்னையில் அதிக மழை கொட்டித்தீர்த்த டாப் 10 இடங்கள்!

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையின் கடந்த 24 மணி ... மேலும் பார்க்க

கொல்கத்தா: கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி; துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துா்கா பூஜை பந்தலில் நேற்றிரவு ( அக்.17) இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 25 போ் காயமடைந்திருக்கின்றனர். வடக்கு கொல்கத்தாவில் உள்ள... மேலும் பார்க்க

Chennai Rain : 'வானிலை மையம் எச்சரித்தது; ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை!' - ஆணையர்

சென்னையில் அதிகனமழை பொழிந்திருக்கிறது. வடசென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணைய... மேலும் பார்க்க

'அனுமதியின்றி அதிகாலை காட்சிகள்; விதிகளை மீறும் தியேட்டர்கள்!' - கண்டுகொள்ளாத தவெக அரசு?

தமிழகத்தில் புதிய படம் வெளியான முதல் ஒரு வாரத்திற்கும் அரசு விடுமுறை நாட்களிலும் திரையரங்குகளில் 9 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குக... மேலும் பார்க்க

"EVM வேண்டாம்; வாக்குச்சீட்டு முறை வேண்டும்" - காங்கிரஸ், தவெகவிற்கு கண்டனங்கள் - திமுக தீர்மானங்கள்

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள்...> எஸ்.ஐ.ஆர் முழுமையாக ர... மேலும் பார்க்க

திருச்சி: "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்!" - தொல்.திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு த... மேலும் பார்க்க