செய்திகள் :

'ஜோசப் விஜய் எனும் நான்...' - ஆதரவு கொடுத்த விசிக, கம்யூக்கள், இ.யூ.எம்.எல்; முதல்வராகும் விஜய்!

post image

தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார்.

இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருப்பதால், ஆளுநர் விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்
ஆளுநரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்

சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றிருந்தது. ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாததால் தவெக தரப்பில் விஜய் மற்ற கட்சியினரின் ஆதரவை நாடினார்.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டது.

காங்கிரஸ் கட்சி முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவை கொடுத்தது. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு மே 6 ஆம் தேதி விஜய் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எண்ணுடன் வாருங்கள் என ஆளுநர் விஜய்யை அனுப்பிவிட, மறுநாளும் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அப்போதும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி அனுப்பி விடவே தவெக முகாம் அப்செட்டானது. இந்த சமயத்தில்தான் திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்கின்றனர் என்கிற தகவல் தீயாய் பரவியது.

தவெக விஜய்
தவெக விஜய்

இதைத் தொடர்ந்தே தவெக தரப்பில் முக்கிய நிர்வாகிகள் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிகவினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி, மக்கள் தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்த தவெகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தனர். இறுதியாக இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியும் தனது ஆதரவை வழங்கியது.

முறையாக தவெகவுக்கு தங்களின் ஆதரவு கடிதத்தையும் அனுப்பி வைத்தனர். இதன்பிறகே விஜய் இப்போது 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

நாளை காலை 11 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விஜய் முதல்வராகப் பதவியேற்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்றே ஆளுநரும் ஆட்சியமைக்க தவெக-வுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி 11 சீட்டுகளுக்குத்தான் பிற கட்சிகளின் உதவியை நாடி வந்தது தவெக. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, ஆளுநர் கேட்ட... மேலும் பார்க்க

சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூற... மேலும் பார்க்க

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு... திமுக-வுடன் உறவு!' - கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய ... மேலும் பார்க்க

'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' - ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காததையடுத்து, புதிய ஆட்சி அமைவது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ம... மேலும் பார்க்க

"அதிமுக, திமுக கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சேர்ந்து ஆட்சி அமைக்க..!" - சசிகலா காட்டம்

திமுக - அதிமுக கூட்டணி என்கிற பேச்சு கடந்த இரண்டு நாள்களாக எழுந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட... மேலும் பார்க்க

விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த சிபிஐ! - ஆதரவு கடிதத்தில் உள்ளது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க