செய்திகள் :

`டாஸ்மாக்கை அகற்றல... இனி கிராம சபையே நடக்காது!' – புறக்கணித்த பெரியகுரும்பத் தெரு மக்கள்; தீர்வு?

post image

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகுரும்பத் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு, விபத்துகளில் இரண்டு உயிர்கள் உயிரிழந்தது, விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

“இந்த மதுபானக் கடையை கடந்து தான் நூற்றுக்கணக்கான பெண் பிள்ளைகள் வழக்கமாக வள்ளிப்பட்டு பள்ளிக்குப் போறாங்க. இந்த டாஸ்மாக் கடையை தாண்டி பள்ளிக்கூடத்துக்குப் போக பெண் பிள்ளைகள் அச்சப்படுறாங்க. பாதுகாப்பில்லாத ஒரு சூழல் இருக்கு. இந்த இடத்துல நடந்த ஆக்சிடென்ட்ல இரண்டு உயிர்கள் போயிருக்கு” என்கின்றனர் மக்கள்.

மேலும், “இந்தக் கடைக்கு அருகில் விவசாய நிலங்கள் இருக்கு. குடிச்சிட்டு அந்த விவசாய நிலங்களுக்குள்ள போய் சேதப்படுத்துற சம்பவங்களும் நடக்குது. அதனாலதான் இந்த டாஸ்மாக்கை எடுக்கச் சொல்லி தொடர்ந்து போராடுறோம்” என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மேலும், “இந்தப் பிரச்னை தொடர்பாக இதுவரைக்கும் 10 முறை மாவட்ட நிர்வாகத்தைச் சந்திச்சு பிரச்னையை சொல்லி மனு கொடுத்திருக்கோம். அப்போ இருந்த மாவட்ட ஆட்சியர்கள் எல்லாரும், ‘கண்டிப்பா நாங்க இதை சரி செஞ்சு கொடுத்துடுவோம். அந்த டாஸ்மாக்கை கட்டாயமா எடுத்துடுவோம்’னு சொன்னாங்க. ஆனா இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கல” என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் டாஸ்மாக் மேலாளர் தரப்பில் மனுதாரருக்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால் கடையை இடமாற்றம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக மக்கள் கூறுகின்றனர்.

“ஒருமுறை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிச்சிருந்தோம். அப்போ காவல்துறை டிஎஸ்பி வந்து விசாரிச்சாங்க. ‘சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருக்கு. அதனால கண்டிப்பா இந்த டாஸ்மாக்கை இடமாற்றம் செஞ்சுருவோம். அது முடியலைன்னா ஹோல்ட் பண்ணி வைப்போம்’னு உறுதி அளிச்சாங்க.அந்த உறுதியை நம்பித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டோம். ஆனா இன்னும் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படல” என்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி (02/10/26) காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை பெரியகுடும்ப தெரு மக்கள் புறக்கணித்துள்ளனர்.

“இனிமேல் பெரிய குரும்பத் தெரு கிராமத்தில் கிராம சபைக் கூட்டமே நடக்காது கிராமசபை கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். இந்தக் டாஸ்மாக் கடையை எடுக்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுக்கப் போறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக மக்கள் முன்வைத்து வரும் இந்தக் கோரிக்கைக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, மாணவிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அவர்கள் முன்வைக்கும் பிரச்னைகளை கருத்தில்கொண்டு, டாஸ்மாக் கடை தொடர்பாக அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரிய குரும்பத்தெரு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்' - சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி: ஒரு மாத வித்தியாசம்; ஆறு மாதப் போராட்டம் - ஆதார் பிழையால் தவிக்கும் மாணவி!

“ஒரு மாத வித்தியாசம் தான், இதை சரிசெய்ய இவ்வளவு சிரமப்படுவோம்னு நினைக்கவே இல்லை!” என்கிறார் அந்த 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவியின் தாய்.கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவி, 8-ம் வகுப்பு வரை தனியார் பள... மேலும் பார்க்க

"இதனால் தான் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை.!"- சௌமியா அன்புமணி

இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியிருக்கிறார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் நோக்கில் சென்னை வாழ் நெல்லை மக்கள் ஏற்பாட்டின் பேரில், நெல்லைக்கு நேர... மேலும் பார்க்க

Flydubai சம்பவம்: "இந்தப் பயங்கரவாத தாக்குதல் 'இந்த' இரண்டின் மீதான தாக்குதலாகும்!" - இஸ்ரேல்

கடந்த 30-ம் தேதி, துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குச் சென்ற ஃபிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்றைத் தகர்க்கப் பார்த்த சம்பவம் ஒன்று நடந்தது.இந்த விபரீதத்தைத் தடுக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந... மேலும் பார்க்க

'பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கும் விருந்து!' - அமைச்சர் ஆதவ் அப்டேட்

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்திருந்தது. அதில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, 'ஆசியப... மேலும் பார்க்க