செய்திகள் :

டெல்லியில் சைபர் குற்ற கால்செண்டர்; அடிமையாக இருந்த 164 வெளிநாட்டினர்; விசாரணையில் பகீர் தகவல்கள்

post image

இந்தியாவில் அதிக அளவில் இணைய சைபர் குற்றங்கள் நடக்கிறது. குறிப்பாக டிஜிட்டல் கைது, கடன், பங்குச்சந்தை முதலீடு எனப் பல்வேறு விதமான சைபர் மோசடிகள் ஆன்லைனில் நடக்கின்றன. இவை அனைத்துமே அதிகமாக போன் மூலமே நடக்கிறது.

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் சட்டவிரோத கால் செண்டர் நடப்பதாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. ஒரு வாரத்திற்கு முன்பு இந்த மோசடி கும்பல் குறித்து இமெயில் மூலம் டெல்லி குற்றப்பிரிவு போலீஸாருக்கு எச்சரிக்கை வந்தது.

இந்தச் செயல்பாடு குறித்த தகவல் கிடைத்தவுடன் சிறப்புப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நடத்திய அதிரடிச் சோதனையில், அந்த இடத்திலிருந்து 92 இந்தோனேசியர்கள் மற்றும் 72 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் போலீஸார் விசாரித்த போது இந்தோனேசியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்களிடம் இந்தியாவில் கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி மோசடிக்கும்பல் அவர்களை டெல்லி அழைத்து வந்துள்ளது.

ஆனால் அவர்கள் இந்தியா வந்தடைந்த பிறகு அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, சைபர் மோசடி கால் சென்டரில் வேலை செய்ய வைக்கப்பட்டனர்.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் நபர்கள் பேயிங் கெஸ்ட் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்பட்டதுடன், சுதந்திரமாக வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. மோசடியில் ஈடுபட மறுத்தவர்கள் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டனர்.

இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பேர் தாக்கப்பட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டினரை கால் சென்டருக்கு அழைத்துச் செல்லவும், மீண்டும் அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்குத் திரும்பக் கொண்டு வரவும் வாடகைக் கார்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இதன் மூலம் அவர்களின் நடமாட்டம் கும்பலின் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலி வேலை வாய்ப்புகள் மூலம் மக்களை ஏமாற்றி அழைத்து வந்து, அவர்களது சொந்த நாட்டு மக்களையே மோசடி செய்ய வைக்கும் எல்லை தாண்டிய சைபர் குற்றங்கள் நொய்டா சோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீட்கப்பட்டுள்ள வெளிநாட்டினரிடம் முக்கியமாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் உள்ள மக்களைத் தொடர்பு கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய எழுதப்பட்ட உரையாடல் குறிப்புகள் வழங்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட பாணியிலான சைபர் மோசடியைச் செய்வதற்கு இந்த வெளிநாட்டினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பெண்களின் பெயரில் போலி அடையாளங்களையும் சமூக வலைத்தளக் கணக்குகளையும் உருவாக்கி, அப்பாவி மக்களைத் தொடர்பு கொண்டு பேசி, ஆன்லைன் மூலம் நட்பை வளர்த்துக் கொள்வர். இலக்கு வைக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்றவுடன், போலி வர்த்தக மற்றும் முதலீட்டுத் தளங்கள் மூலம் முதலீடு செய்யுமாறு அவர்களைத் தூண்டியுள்ளனர். அவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்

இந்த வழக்கு தொடர்பாக 25 வயதான மலேசிய நாட்டவரான டான் குவான் வெய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள இரண்டு முக்கியக் குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில், இந்தியர்களும் இதுபோன்று அதிக சம்பள வேலை ஆசை காட்டப்பட்டு வியட்நாம், கம்போடியா, மியான்மர், லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மோசடி மையங்களில் வேலை செய்ய வைக்கப்பட்டனர்.

உதயநிதி பிறந்தநாள் பேனர்: ``ஒருசிலரது இருப்பைக் காட்ட 2 உயிர்களை இழந்துள்ளோம்" - நிர்மல் குமார்

திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் வாணியன் சத்திரம் பகுதியில் திமுகவினர் வாழ்த்து பேனர் வைக்கும் பண... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: பெண் அலுவலரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக்கேயன் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றிய தகடி கிராமத்தில் காலை உணவுத் திட்டப் பணிக்கு பணியாளரை நியமிப்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திக... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை கழிவறையில் முதியவர் சடலம்; இறந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்பு; நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாக்குட்டி ராவத்தர் (77). சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த 16-ம் தேதி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.... மேலும் பார்க்க

CJP: வெளிநாடு செல்வதைத் தடுக்க காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்

காக்ரோச் ஜனதா கட்சியினர் கடந்த மாதம் டெல்லி மற்றும் மும்பையில் தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்தத... மேலும் பார்க்க

Dating App வலையில் சிக்கிய டாக்டர்; விடுதியில் கட்டிப்போட்டு நகை, பணம் பறிப்பு; பகீர் பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியின் நுழைவுப் பகுதி அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், கடந்த 20-ம் தேதி ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்தி மணிகண்டன் (23) என்பவரது பெயரில் 8 பேர் கொண்ட குழுவ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "48 மணி நேரத்துக்குள் பதில் வேண்டும்" - விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பிய பாஜக நிர்வாகி

"உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏன் ஏற்றவில்லை" என்று, தமிழக முதல்வர் விஜய்க்கு, ஆந்திர மாநில பாஜக நிர்வாகியும், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அற... மேலும் பார்க்க