செய்திகள் :

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" - போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

post image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட சிபிஎம் மூத்த தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்திருகின்றனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

கைது செய்யப்பட்ட தலைவர்கள் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டப்போது எம்.பி ஜான் பிரிட்டாஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் பேசியிருக்கும் எம்.பி ஜான் பிரிட்டாஸ், "சத்ரசால் மைதானத்தில் எங்களைச் சுமார் 30-45 நிமிடங்கள் அடைத்து வைத்திருந்த பிறகு, டெல்லி காவல்துறை எங்களை ஜீப்பில் ஏற்றி எங்கோ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

எங்கு செல்கிறோம் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. நான், முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட மூத்த சிபிஎம் தலைவர்களை ஜீப்பில் அழைத்துச் செல்கின்றனர். டெல்லியை மாறி மாறி சுற்றிக்கொண்டிருக்கிறோம். முன்னாள் முதலமைச்சருக்கே (பினராயி விஜயன்) இந்த நிலைமை என்றால், இந்த நாட்டில் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

சிபிஎம் தலைவர்களை ஜீப்பில் அழைத்து செல்லும் காவல்துறை
சிபிஎம் தலைவர்களை ஜீப்பில் அழைத்து செல்லும் காவல்துறை

எங்களிடம் எதுவும் சொல்லாமல் காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். டெல்லி முழுவதும் இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அடிப்படை குடியுரிமை கூட இங்கு இல்லை. மோடியும், அமித்ஷாவும் ஞானேஷ் குமாரைப் பாதுகாக்கிறார்கள்" என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Delhi Protest: அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமாகிவிட்டாரா? டெல்லி காவல்துறை சொல்வது என்ன?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்ப... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் Vs காங்கிரஸ்: 'ஜனநாயகக் காவலா? அரசியல் லாபத்திற்கா?' - ஓர் அலசல்

SIR விவகாரப் போராட்டம்வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஒருபுறம் நீட் தேர்வு விவகாரத்தி... மேலும் பார்க்க

'வறட்சி, நிதி பற்றாக்குறை' - மாணவர்களுக்கு சம்பளப் பணத்தில் மதிய உணவளிக்கும் மகாராஷ்டிரா ஆசிரியர்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் மாணவர்கள் மதிய... மேலும் பார்க்க

"கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து பேசியிருக்கிறாரா?" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "கடந்த 5 வருடங்களில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரு நாளாவது பாஜகவையோ இல்லை மோடியை எதிர்த்தோ பேசியிருக்கிறார்களா? அவர்கள் எப்போது ப... மேலும் பார்க்க

மதுராந்தகம்: 'தவெகவின் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவிய பாமக?' - களத்தில் என்ன நடந்தது?

இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் தவெக வென்றிருக்கிறது. இதில் மதுராந்தகம் தொகுதியை தவெக வெல்ல பாமகவின் நிலைப்பாடு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகத்தில் த... மேலும் பார்க்க

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றிருந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் இந்த தொகுதிகளை இழந்தது மட்ட... மேலும் பார்க்க