செய்திகள் :

ட்ரம்ப் கட்சி தோல்வி: "மதச்சார்பின்மையும், அடிப்படை ஜனநாயக உணர்வும் வென்றுள்ளன" - ப.சிதம்பரம் பதிவு

post image

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்போது ஜனநாயகக் கட்சி (எதிர்க்கட்சி) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இதைக் குறிப்பிட்டு காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“சட்டவிரோதக் குடியேற்றம், ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் ஊடுருவல், இஸ்லாமோபோபியா (இஸ்லாமியப் பயம்) சார்ந்த வெறுப்புப் பிரசாரங்கள் போன்ற பலவிதமான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில்தான் அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.

ப.சிதம்பரம் பதிவு
ப.சிதம்பரம் பதிவு

இன்னொரு பக்கம், வாழ்க்கைச் செலவு, வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு போன்ற மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகள் மக்களை அமுக்கிவிடுவது போல் அச்சுறுத்தின.

இறுதியில், தாராளமயம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் அமெரிக்காவின் அடிப்படை ஜனநாயக உணர்வும் ஆன்மாவும்தான் வெற்றி பெற்றுள்ளன.

ஒரு சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டில் குடிமக்களாக வாழ விரும்பும் அனைவருக்கும் இதில் ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார் ப.சிதம்பரம்.

``வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" - கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அருண்ராஜ் தகவல்

சென்னை எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இரத்த மஜ்ஜை மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant) பிரிவிற்கு 'எக்ஸ்ட்ரா கார்போரியல் போட்டோபெரிசிஸ்' (Extracorporeal Photopheresis - ECP) என்ற அதி... மேலும் பார்க்க

"பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள்! உண்மையை வெளிக்கொண்டு வந்த பெருமாள் முருகன்" - சு.வெங்கடேசன்

கடந்த மாதம் கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இந்த நூலகத்திற்கான நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை எழுதியுள்... மேலும் பார்க்க

"இனி நலத்திட்டங்களை பெற ஆதார் இல்லை; வாக்காளர் அட்டை வேண்டுமா?" - ராகுல் காந்தி எதிர்ப்பு

இனி அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைத் தாண்டி, வாக்காளர் அட்டை வேண்டும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத... மேலும் பார்க்க

ரூ.4,730 கோடி மணல் கொள்ளை: புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.4,730 கோடி மணல் கொள்ளை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதித்த அளவை விட பல மடங்கு கூடுதலாக மணல் ... மேலும் பார்க்க

சிவகங்கை சோகம்: இறந்த தந்தையின் உடலுடன் 3 நாள்கள் வசித்த மனநலம் குன்றிய மகன்!

சிவகங்கையில் தந்தை உயிரிழந்தது கூடத் தெரியாமல், அவரது உடலுடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மூன்று நாள்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க

பெரியார் அறிவுலகம்: ``இல்லாத பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது எப்படி?"- டிடிவி தினகரன்

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் ``அந்தத் தொகைக் கோடிக்கணக்கில் இருக்கும் என்று தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோக... மேலும் பார்க்க