செய்திகள் :

நூறு கோடி வானவில் விமர்சனம்: காதலின் எதார்த்தத்தைப் பேசுகிறதா இந்த கலர்புல் சினிமா?

post image

மும்பையிலுள்ள பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கும் வினோத் (ஹரிஷ் கல்யாண்) பதவி உயர்வுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரை கோவாவிலுள்ள லோக்கல் கிளைக்குப் பணிமாற்றம் செய்கிறது நிர்வாகம். கோவாவில் தரையிறங்கும் வினோத்திற்கு, சுற்றுலா வழிகாட்டியான ஃபென்னியைக் (சித்தி இத்னானி) கண்டு ஈர்ப்பு வருகிறது.

நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review
நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review

ஃபென்னியை வைத்து வெற்றிகரமாக ஒரு நிகழ்ச்சியைச் செய்துகாட்டி, தன்னை நிரூபிக்க முடிவெடுக்கிறார் வினோத். முதலில் மறுத்தாலும், கோமா நிலையில் இருக்கும் தன் காதலர் ரிச்சியின் (ரினில்) மருத்துவச் செலவிற்காக ஒத்துக்கொள்கிறார் ஃபென்னி. இந்தப் பயணத்தில் வினோத்துக்கும் ஃபென்னிக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடும் காதலைப் பேசுகிறது இயக்குநர் சசியின் 'நூறு கோடி வானவில்'.

கோபம், துருதுருப்பு, காதல், அதன் தத்தளிப்பு எனத் துடிப்பான இளைஞர் கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் கச்சிதம். ஆங்காங்கே தலைகாட்டும் குடும்ப எமோஷனிலும் குறைகளில்லை. கண்மூடித்தனமான காதல், அப்பாவித்தனம், முக்கோணக் காதலோடு மல்லுக்கட்டுவது என எந்நேரமும் எமோஷன்களோடு நடைபோடும் ஃபென்னி கதாபாத்திரத்தை, சில மிகை நடிப்புத் தருணங்களோடு கரைசேர்க்கிறார் சித்தி இத்னானி. ஃபென்னியின் காதலனாக ரினிலின் செயற்கைத்தனமான நடிப்பு பெரிய மைனஸ். கோவை சரளா, தம்பி ராமையா, விஜே பார்வதி, சின்னி ஜெயந்த் ஆகியோர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.

நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review
நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review

கோவாவின் பழைமையின் அழகையும், பசுமையின் பொலிவையும் இந்தக் காதல் கதைக்கு டபுள் இன்ஜினாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார். காதல் படத்திற்கான மீட்டரைப் படத்தொகுப்பாளர் எம்.சுபாரத் கச்சிதமாகப் பிடித்திருந்தாலும், பல இடங்களில் வேகத்தைக் கூட்டத் தவறியிருக்கிறார். சித்து குமாரின் 'போதும் போ', 'கண்ணாட்டி' ஆகிய பாடல்களும், சில பின்னணி இசை கோவைகளும் காதலுக்கு ஸ்ருதி சேர்க்கின்றன.

பரபரப்பான மும்பை இளைஞன் vs நிதானமான கோவா இளைஞி என்ற தொடக்க லைனும், கோவாவின் பின்புலமும் சுவாரஸ்யம் தருகின்றன. ஃபென்னியின் காதல், லட்சியம், வினோத்தின் காதல், அவரது லட்சியம் என மையக்கதை தேவையான திருப்பங்கள், முட்டல் மோதல்களுடன் நகர்ந்தாலும், படம் முழுதும் நீடிக்கும் செயற்கைத்தனம் திரையோடு நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது. மேலும், திருப்பங்களும் திரைக்கதையும் மேம்போக்காகவும், யூகிக்கும் வகையிலும் நகர்வது பெரிய மைனஸ்.

நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review
நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review

கண்மூடித்தனமான காதலால் தன் சின்ன சின்ன ஆசைகளையும், லட்சியங்களையும், சுயத்தையும் துறக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனப்போராட்டத்தையும், காதலால் மனதிற்குள் வரும் ஊசலாட்டத்தையும் ஃபென்னி கதாபாத்திரம் மூலம் நன்றாகப் பதிவு செய்கிறது திரைக்கதை. ஆனால், ஏற்கனவே கண்மூடித்தனமான காதலிலிருக்கும் பெண்ணுக்கு ஏன் வேறொரு ஆண் மீது காதல் வருகிறது என்பதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாமல் இருப்பது குழப்பத்தையே தருகிறது.

திருநர் கதாபாத்திரம் மூலம் இயக்குநர் என்ன நிறுவ வருகிறார் என்பதிலும் குழப்பமே! ஆங்காங்கே மெல்லுணர்வைப் பேசும் காட்சிகளும், சின்ன சின்ன ஒன்லைனர்களும் ஆறுதல் தருகின்றன. கவிதைப்பூர்வமான சில வசனங்கள் ரசிக்க வைத்தாலும், அதே வகையான ஏனைய வசனங்கள் செயற்கைத்தனத்தோடு துருத்திக்கொண்டு நிற்கின்றன.

காதலின் எதார்த்தத்தையும் ஊசலாட்டத்தையும் பேசும் அழகான மையக்கதையை, முழுமையும் தெளிவும் இல்லாத திரைக்கதையால் கலைத்துப் போடுகிறது இந்த 'நூறு கோடி வானவில்'.

மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்: சாத்தான், மாந்திரிகம், அம்மன் சக்தி - சுந்தர்.சி காம்போ வெல்கிறதா?

காவல் அதிகாரியாக இருக்கும் சக்திக்கு (நயன்தாரா) இரவு நேரங்களில் அமானுஷ்யமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் அவரை மயிலாஞ்சி என்னும் ஊருக்குச் செல்லச் சொல்கிறது ஓர் உருவம். பணியிட மாற்றம் வாங்கிக்கொ... மேலும் பார்க்க

"மூக்குத்தி அம்மன் 2 பார்த்து சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது" - நடிகை குஷ்பு பகிர்வு

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகைகள் ஊர்வசி, நயன்தாரா, ரெஜினா கான்ஸ்ரா, குஷ்பு, சினேகா நடிகர்கள் யோகிபாபு, கே.ஜி.எப்.கருடா ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது மூக்குத்தி அம்மன் - 2. இன்... மேலும் பார்க்க

காலை 6 மணி சிறப்புக் காட்சி: சீமான் கண்டனத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அதிருப்தி; விளக்கும் சீமான்

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெ... மேலும் பார்க்க

"வடக்கு - தெற்கு பிரிவினையை உருவாக்குகிறீர்கள்" - ஜான்வியின் குற்றச்சாட்டுக்கு ரெஜினா பதில்

சமீபத்தில் கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், தான் நடித்த 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து பேசியிருந்தார். தென்ன... மேலும் பார்க்க

`பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடல் புகழ் நடிகை தற்கொலை... துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விபரீத முடிவு!

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி...உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் எண்பதுகளில் பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆ... மேலும் பார்க்க

Arasan Promo: தீபாவளிக்கு வெளியாக வேண்டிய முன்னோட்ட வீடியோ தள்ளிப்போகிறதா? காரணம் இதுதான்!

கடந்த ஒருசில வாரத்திற்கு முன்னர், சிலம்பரசன் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு விருந்து காத்திருக்கிறது என்றும், தீபாவளி அன்று 'அரசன்' முன்னோட்ட வீடியோவான `The World of Arasan' என்ற வெளியாகவிருக்கிறது என்றும்... மேலும் பார்க்க