செய்திகள் :

"நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை" - திமுகவினர் மீது சிவகங்கை தவெக எம்எல்ஏ குழந்தை ராணி புகார்

post image

சிவகங்கையில் தவெக பெண் எம்.எல்.ஏ குழந்தை ராணி மீது 20 சதவீத கமிஷன் புகார் எழுப்பப்பட்டுள்ளதும், தன் மீது பொய்ப் பிரசாரம் செய்யும் 4 திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.11 கோடி திட்டப் பணிகள்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பணிகள் அனைத்தும் த.வெ.கவினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகளை ஒதுக்கீடு செய்ய 20 முதல் 30 சதவீதம் வரை சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தை ராணி மிஷன் கேட்பதாகவும் ஒப்பந்ததாரர்கள் சிலர் கடந்த வாரம் குற்றம்சாட்டினர்.

ஆனால் திமுகவினர் பொய்ப் பிரசாரம் செய்வதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை ராணி புகார்
குழந்தை ராணி புகார்

எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, சிவகங்கை த.வெ.க பெண் எம்.எல்.ஏ குழந்தைராணி தனது ஆதரவாளர்களுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"கடந்த வாரம் சில ஒப்பந்ததாரர்கள் என்னைச் சந்தித்து, விபி-ஜி ராம் ஜி திட்டப் பணிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். ஆனால், 'அனைத்து ஒப்பந்தப் பணிகளும் ஆன்லைன் மூலம் நேரடியாகவே எடுக்கப்படுகின்றன; இதில் எங்கள் தலையீடு எதுவுமில்லை' என்று தெரிவித்துவிட்டேன்.

நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை. எங்கள் கட்சியும் தலைவரும் எந்தவித முறைகேடும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம்.

என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பொய்ப் பிரசாரம் பரப்பி வரும் திமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளேன்"

இவ்வாறு அவர் கூறினார்.

தவெக எம்எல்ஏ குழந்தை ராணிமீது கமிஷன் புகாரும் அதற்கு எம்எல்ஏ தரப்பு மறுப்பும் புகாரும் என மாறிமாறி அளித்து வருவது சிவகங்கை அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.

ட்ரம்ப் கட்சி தோல்வி: "மதச்சார்பின்மையும், அடிப்படை ஜனநாயக உணர்வும் வென்றுள்ளன" - ப.சிதம்பரம் பதிவு

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்போது ஜனநாயகக் கட்சி (எதிர்க்கட்சி) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதைக் குறிப்பிட்டு காங்கிரஸின் மூத்த த... மேலும் பார்க்க

"போதைப்பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா?" - விஜய்யின் பேச்சுக்கு டிடிவி கண்டனம்

"போதைப்பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா?" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் விஜய்யைச் சாடியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "இளைஞர்களின் ... மேலும் பார்க்க

ரூ.15 கோடி குதிரை பேர புகார்: MLA முஸ்தபாவின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை; அதிமுக பிரமுகர் கைது

தவெக ஆட்சியைக் கவிழ்பதற்காக 15 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ மாதர் பதுருதீன் முஸ்தபா நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்று காலை அதிமுகவைச் சேர்... மேலும் பார்க்க

பெரியார் நூலகம்: "நூல் கொள்முதலில் ஊழல்" - பெருமாள் முருகனின் குற்றச்சாட்டும் ராஜ்மோகனின் பதிலும்

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் சிந்தை கட்டுரையில், ``நூல் கொள்மு... மேலும் பார்க்க

காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - கனிமொழி கேள்வி

’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், ஆந்திராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நில... மேலும் பார்க்க

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: `ஆட்சி அமைக்கப்போவது யார்?' - தொடரும் இழுபறி - என்ன நடக்கிறது?

இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசை அமைப்பதில் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் தேத... மேலும் பார்க்க