செய்திகள் :

காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - கனிமொழி கேள்வி

post image

’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், ஆந்திராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், "முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள்
மீனவர்கள்

மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்துயரத்திற்குப் பிறகும் மீன்வளத்துறை அமைச்சர் அம்மக்களைச் சந்திக்க வராதது ஏன்?

பேரிடர் காலத்திலும் அலட்சியமாகச் செயல்பட்ட தவெக அரசு இத்துயரத்திற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ரூ.15 கோடி குதிரை பேர புகார்: MLA முஸ்தபாவின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை; அதிமுக பிரமுகர் கைது

தவெக ஆட்சியைக் கவிழ்பதற்காக 15 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ மாதர் பதுருதீன் முஸ்தபா நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்று காலை அதிமுகவைச் சேர்... மேலும் பார்க்க

பெரியார் நூலகம்: "நூல் கொள்முதலில் ஊழல்" - பெருமாள் முருகனின் குற்றச்சாட்டும் ராஜ்மோகனின் பதிலும்

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் சிந்தை கட்டுரையில், ``நூல் கொள்மு... மேலும் பார்க்க

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: `ஆட்சி அமைக்கப்போவது யார்?' - தொடரும் இழுபறி - என்ன நடக்கிறது?

இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசை அமைப்பதில் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் தேத... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: "தமிழ்நாடு அபாயத்தை நோக்கி நகர்வது ஏன்?" - பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். அதற்கான இடமாக பட்டினப்பாக்கத்தில் கடலுக்கு அருகே இருக்கும் சுமார் 25 ஏ... மேலும் பார்க்க

US Mid Term Election: ட்ரம்ப் கட்சி படுதோல்வி; இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்குப் பணமழை

அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இது இந்தியப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நேற்று காலை ஆரம்ப பங்குச்சந்தை வர்த்தகத்தில... மேலும் பார்க்க

சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: ``புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" - உதயநிதி

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஓட்டுநர் சூர்யா (49) தலைமையில் குப்பன் (48), மோகன் (47), முருகன் (48), குப்புசாமி (58), அரவி... மேலும் பார்க்க