செய்திகள் :

போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? - பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்!

post image

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலுக்கே அருகே புதிய தலைமைச் செயலகத்தை கட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய தேதி வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியே ஆக வேண்டுமென முதல்வர் விஜய் உறுதியாகவே இருப்பதாக தலைமைச் செயலகத்தின் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கிசுகிசுக்கின்றனர்.

போராடிய மீனவர்கள்
போராடிய மீனவர்கள்

பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டப் போவதாக முதல்வர் விஜய் அறிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே பட்டினப்பாக்கத்தில் கடலுக்கு அருகே இருக்கும் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.

மீனவ கிராமத்துக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அமைவதை அங்கிருக்கும் 12 மீனவ கிராமத்தினரும் விரும்பவில்லை. குறிப்பிட்ட அந்த இடத்தில் மீனவர்கள் குடியிருப்பு கட்ட வேண்டி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை நிறைவேற்றாமல் புதிய தலைமைச் செயலகம் என அரசு இறங்குவது மீனவர்களை கோபப்படுத்தியிருக்கிறது.

CM Vijay
CM Vijay

மேலும், அங்கே தலைமைச் செயலகம் அமைந்தால் தங்களின் மீன்பிடி தொழிலே பாதிக்கப்படும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசைக் கண்டித்து தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மீனவ கிராம மக்கள் எல்லாரும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தனர். இந்த வாரத்தில் கூட அரசு முறையாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தாமல் போக்கு காட்டுவதாக கண்டனம் தெரிவித்தனர். அதுதொடர்பாக நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், 'பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்துக்காக அரசு ஒரு பிடி நிலத்தை கையிலெடுத்தாலும் மீனவ கிராமங்கள் அத்தனையும் போராட்டத்தில் இறங்குவோம்' என்றனர்.

பட்டினப்பாக்கம் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என கோட்டையில் முதல்வருக்கு நெருக்கமான சீனியர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், 'பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்துதான் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். இன்றைய தேதி வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் மட்டுமே தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்பதில் முதல்வர் தரப்பு அப்படியே உறுதியாக இருக்கிறது. பட்டினப்பாக்கத்துக்கு பதில் கிண்டி, பல்லவன் இல்லம் என வெளியான செய்திகளிலெல்லாம் உண்மையே இல்லை. இப்போது வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் திட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்றுதான் ஆலோசித்து வருகிறோம்' என்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: ``புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" - உதயநிதி

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஓட்டுநர் சூர்யா (49) தலைமையில் குப்பன் (48), மோகன் (47), முருகன் (48), குப்புசாமி (58), அரவி... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலே அறிவிக்கப்படல; இப்போதே விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சிட்டார்" - ரகுபதி தாக்கு

முன்னாள் அமைச்சர் ரகுபதி இடைத்தேர்தலே அறிவிக்கல. இப்போதே பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான் தூய ஆட்சியா.? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கையில், ``தமிழ்நாடு ... மேலும் பார்க்க

மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தருவது யார் பொறுப்பு?

ஹலோ வாசகர்களே..!டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா உலகத்துக்கே முன்மாதிரியாக இருக்கிறது. கையில் பணமே எடுத்துச்செல்லத் தேவையில்லாத அளவுக்கு கிராமப்புறங்களில்கூட மாற்றம் வந்துவிட்டது. ஆனால், அதேவேகத... மேலும் பார்க்க

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழா; முதல்வர் விஜய், தொழிலதிபர் அதானி பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களான ஸ்ரேயா-உஜ்வல் பெலானியை வாழ்த்தினர். மேலும் பார்க்க

``நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" - பிரதமரிடம் பேசிய சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான சரத் பவாருக்கு இருமல் மற்றும் மூச்சுவிடும்போது நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 2-ம் தேதி ரூபி ஹால் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

திமுக அலுவலகத்துக்கு அடிக்கல், பெரியார் அறிவுலகத்திற்காக பாராட்டு விழா - கோவையில் ஸ்டாலின் |Album

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க