செய்திகள் :

``இடைத்தேர்தலே அறிவிக்கப்படல; இப்போதே விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சிட்டார்" - ரகுபதி தாக்கு

post image

முன்னாள் அமைச்சர் ரகுபதி இடைத்தேர்தலே அறிவிக்கல. இப்போதே பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான் தூய ஆட்சியா.? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கையில், ``தமிழ்நாடு முதல்வர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நிறைய புதிய திட்டங்கள் வரும் என புதுக்கோட்டை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஜோசியர் சொன்னதின் அடிப்படையில், ஏற்கனவே ஏற்பாடு செய்த பெரிய இடத்தை விட்டுவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியிலும், எந்த புதிய திட்டங்களும் அறிவிக்காமல், எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார். முதல்வர் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வரவழைக்க வேண்டும் என்பதற்காக மகளிர் கல்லூரி செமஸ்டர் தேர்வை தள்ளிவைத்திருக்கின்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அடுத்ததாக புதிய பேருந்து நிலையத்தைத் திறப்பதற்குச் சென்றார். புதிய வழித்தடங்களில், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்குப் பயன் தரும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அங்கேயும் பெருத்த ஏமாற்றம் மிச்சம். புதுக்கோட்டை மாவட்டத்துக்கு முதல்வர் வருவதால், பொதுமக்களைத் தடுப்பதற்காக ரூ.10 கோடி செலவு செய்து, 45 கிமீ பேரிகார்டு கட்டியது, நிகழ்ச்சி நடக்காத இடத்தில பிரமாண்டமான பந்தல் போடப்பட்டது என மக்களின் பணம் வீணானதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அதனால், புதுக்கோட்டை விசிட், பெயிலியரான விசிட்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் தேதியோ, வேட்பாளரோ இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளி பரிசு எனக் கூறி, விராலிமலைத் தொகுதியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவர்சில்வர் பாத்திரம், ஸ்வீட் பாக்ஸ், ரசகுல்லா டின் என ரூ.2000 மதிப்புள்ள பொருள்களைக் முதற்கட்டமாக விநியோகிக்கத் துவங்கி இருக்கிறார். மக்களுக்கு நாங்கள் எதுவும் கொடுக்கமாட்டோம் எனக் கூறிய தூய்மை ஆட்சியில், விஜயபாஸ்கர் 90,000 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு தவறாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

மற்றவங்களுக்கு ரொக்கமாக பணம் கொடுத்து கொண்டிருக்கிறார். தேர்தலை முன்னிட்டு இப்போதே பட்டுவாடா தொடங்கிவிட்டார்கள். இன்னும் எத்தனை கோடியை அங்கே கொட்டப் போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ஒரு பதம் என்பார்கள். எனவேதான் விராலிமலையை இங்கே உங்களுக்கு நான் உதாரணமாக சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசு தடுமாறுகிறது. மின்கட்டண உயர்வு, பால் பற்றாக்குறை, அப்படியே பால் கிடைத்தாலும் அதன் விலை உயர்வு என மக்கள் அல்லல்படுகிறார்கள். தீபாவளியை முன்னிட்டு எல்லா பொருளுக்கும் விலை உயர்ந்துவிட்டது. மக்களிடத்திலே வாங்கும் சக்தியும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. ஆனால் கடந்த ஆண்டு தீபாவளியை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

முதலமைச்சர் வரப்போகிறார், ஒரு கட்டிடத்தை திறக்க போகிறார் என்றால் அது திராவிட மாடல் ஆட்சியிலே எங்களுடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்த திட்டம். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக திமுக அலுவலகத்துக்கு முன்பு இனிப்புகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், காவல்துறை அதைப் பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டது. அந்தளவு ஒரு மோசமான நிலைதான் புதுக்கோட்டை மாவட்டத்தில் நீடிக்கிறது." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தருவது யார் பொறுப்பு?

ஹலோ வாசகர்களே..!டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா உலகத்துக்கே முன்மாதிரியாக இருக்கிறது. கையில் பணமே எடுத்துச்செல்லத் தேவையில்லாத அளவுக்கு கிராமப்புறங்களில்கூட மாற்றம் வந்துவிட்டது. ஆனால், அதேவேகத... மேலும் பார்க்க

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழா; முதல்வர் விஜய், தொழிலதிபர் அதானி பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களான ஸ்ரேயா-உஜ்வல் பெலானியை வாழ்த்தினர். மேலும் பார்க்க

``நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" - பிரதமரிடம் பேசிய சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான சரத் பவாருக்கு இருமல் மற்றும் மூச்சுவிடும்போது நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 2-ம் தேதி ரூபி ஹால் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

திமுக அலுவலகத்துக்கு அடிக்கல், பெரியார் அறிவுலகத்திற்காக பாராட்டு விழா - கோவையில் ஸ்டாலின் |Album

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க

US Elections: சபாநாயகர் பதவியை நோக்கி ஹக்கீம் ஜெஃப்ரிஸ்... அமெரிக்க வரலாற்றில் புது மாற்றமா?

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த சபாநாயகராக அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப... மேலும் பார்க்க

கேரளாவில் பிறந்தவர்.. இன்று லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர்! - அமெரிக்க அரசியலில் முத்திரை பதித்த நித்யா ராமன்

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் . தற்போதைய மேயர் கரேன் பாஸை தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றிருப்... மேலும் பார்க்க