செய்திகள் :

"போதைப்பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா?" - விஜய்யின் பேச்சுக்கு டிடிவி கண்டனம்

post image

"போதைப்பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா?" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் விஜய்யைச் சாடியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா? மாணவ, மாணவியர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல பேசி, அதனை Normalize செய்ய முயல்வது தான் முதலமைச்சரின் வேலையா?

10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை அழைத்து, அவர்கள் மத்தியில், “லஞ்சம் ஊழல் அந்த சைடு எல்லாம் போய்டாதீங்க, இந்த போதைப் பொருள் அந்த சைடு எல்லாம் போய்டாதீங்க ஒரு Fun & Enjoyment இருக்கும் ஆனா எந்தத் தவறுக்கும் அடிமையாயிடாதீங்க” என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஏற்கனவே காற்றில் கலந்த விஷத்தைப் போலத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவி, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தையே சிதைத்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை, கொண்டாட்டப் பட்டியலில் (Fun & Enjoyment) சேர்த்து, அளவுடன் பயன்படுத்துங்கள் என்பது போல ஊக்குவிப்பதும், அவற்றின் பயன்பாட்டை Normalize செய்ய முயல்வதும் முதலமைச்சருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.

சமீபத்தில், 100 கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்த தவெக நிர்வாகியை மத்திய அரசின் விசாரணை அமைப்பு கைது செய்துள்ள நிலையில், தற்போது போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான முதலமைச்சரின் பேச்சைப் பார்க்கும்போது, பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

திரைப்படங்களின் மூலம் மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், அதை விற்பனை செய்வது போன்ற சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடித்தது போதாதென்று, தற்போது மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவிலும் இத்தகைய செயல்பாடுகளை Normalize செய்து பேசுவது, முதலமைச்சரே இளைஞர்களையும் மாணவர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, முதலமைச்சரே சொல்லிவிட்டார் என்பதற்காகச் சிறிதளவு போதைப் பொருட்களைப் பயன்படுத்தலாமே என்ற மனநிலைக்கு மாணவர்களும் இளைஞர்களும் சென்றுவிட்டால், அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பது யார்? அதற்கான சமூகப் பொறுப்பை ஏற்பது யார்? என்ற கேள்வியும் எழுகிறது.

எதற்கெடுத்தாலும் தன்னைப் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒப்பிட்டுப் பேசிக்கொள்ளும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், புரட்சித்தலைவர் தான் நடித்த திரைப்படங்களில் மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட எந்தவொரு சமூகச் சீர்கேட்டையும் ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகளில் நடிக்காமல், தனது திரைப்படங்கள் மக்களுக்கு நன்னடத்தையையும் , சமூக விழிப்புணர்வையும் எடுத்துரைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அதனால் தான் அவர் மக்களால் அன்போடு ‘வாத்தியார்’ என்று அழைக்கப்படுகிறார் என்பதை எண்ணிப்பார்த்து இனியாவது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்திக்கொள்வதோடு தான் அத்தகைய ஒப்பீட்டுக்குத் துளியும் தகுதியோ அருகதையோ இல்லாதவர் என்பதை உணர வேண்டும்!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், ஒரு துளி விஷம் என்றாலும் அது விஷம் தான் என்பதை உணராமல் போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது அபத்தமானது.

எனவே, மாணவர்களுக்கு விருது வழங்கும் மேடையில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான விதைகளை விதைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, விஷத்தை விதைத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

’பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் வாங்கியதில் ஊழலா?’ - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்ததில் தவறு நட... மேலும் பார்க்க

ட்ரம்ப் கட்சி தோல்வி: "மதச்சார்பின்மையும், அடிப்படை ஜனநாயக உணர்வும் வென்றுள்ளன" - ப.சிதம்பரம் பதிவு

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்போது ஜனநாயகக் கட்சி (எதிர்க்கட்சி) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதைக் குறிப்பிட்டு காங்கிரஸின் மூத்த த... மேலும் பார்க்க

"நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை" - திமுகவினர் மீது சிவகங்கை தவெக எம்எல்ஏ குழந்தை ராணி புகார்

சிவகங்கையில் தவெக பெண் எம்.எல்.ஏ குழந்தை ராணி மீது 20 சதவீத கமிஷன் புகார் எழுப்பப்பட்டுள்ளதும், தன் மீது பொய்ப் பிரசாரம் செய்யும் 4 திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் மாவட்ட காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

ரூ.15 கோடி குதிரை பேர புகார்: MLA முஸ்தபாவின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை; அதிமுக பிரமுகர் கைது

தவெக ஆட்சியைக் கவிழ்பதற்காக 15 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ மாதர் பதுருதீன் முஸ்தபா நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்று காலை அதிமுகவைச் சேர்... மேலும் பார்க்க

பெரியார் நூலகம்: "நூல் கொள்முதலில் ஊழல்" - பெருமாள் முருகனின் குற்றச்சாட்டும் ராஜ்மோகனின் பதிலும்

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் சிந்தை கட்டுரையில், ``நூல் கொள்மு... மேலும் பார்க்க

காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - கனிமொழி கேள்வி

’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், ஆந்திராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நில... மேலும் பார்க்க