செய்திகள் :

"மூக்குத்தி அம்மன் 2 பார்த்து சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது" - நடிகை குஷ்பு பகிர்வு

post image

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகைகள் ஊர்வசி, நயன்தாரா, ரெஜினா கான்ஸ்ரா, குஷ்பு, சினேகா நடிகர்கள் யோகிபாபு, கே.ஜி.எப்.கருடா ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது மூக்குத்தி அம்மன் - 2.

இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு இயக்குநர் சுந்தர்.சி நடிகை குஷ்பு சத்யம் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``மூக்குத்தி அம்மன் 2 படத்தை பெண்களும், குழந்தைகளும் விரும்பிப் பார்க்கிறார்கள். சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது. அதுவே எங்களுக்கு பாசிட்டிவ் வைப்-ஆக தெரிகிறது.

குஷ்பு - சுந்தர் சி
குஷ்பு - சுந்தர் சி

சுந்தர் சி படத்துக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள் என்பார்கள். அது இப்போதும் நடந்திருப்பதில் மகிழ்ச்சி. அதிகாலை 6 மணி ஷோவுக்கு முதல்வர் அனுமதி கொடுத்திருக்கிறார். அவருக்கும், அமைச்சர் ராஜ் மோகனுக்கும் மிக்க நன்றி. திரைத்துறையினர் நன்றாக இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.

இந்த அறிவிப்பு திரைத்துறையினர் அனைவருக்கும் பெரிய பிளஸ்ஸாக இருக்கிறது. மூக்குத்தி அம்மன் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதில் அந்தப் படத்தில் இருந்த ஊர்வசி, நயன்தாரா இருவர் மட்டும்தான் இருக்கிறார். இதைத்தாண்டி முதல் படம் வேறு கதை, இரண்டாம் பாகம் வேறு கதை" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

96 : காதல் கவிதை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 37

`சினி'ஸ்கோப் 3796 : காதல் கவிதை!தொடங்கும்போதே ’பிளானெட் எர்த்’ போன்ற ஒரு டிஸ்கவரி சேனல் டாக்குமெண்டரிக்குள் நுழைந்துவிட்டோமோ என்பதான ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது படம். வாழா என் வாழ்வை வாழவேதாழாமல் மே... மேலும் பார்க்க

Scene Review: அட! புதிய பரிமாணத்தில் சூர்யா - ஜித்து மாதவன் காட்டும் ‘சீன்’ எப்படி?

ஐந்து முறை ராஜினாமா கடிதம் கொடுத்தும் பணியிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார் டி.எஸ்.பி இன்பராஜ் (சூர்யா). அவரது விசித்திரமான விசாரணை முறைகள் சலிப்பூட்டினாலும், புலனாய்வில் அவருக்கு இருக்கும் தனிப... மேலும் பார்க்க

மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்: சாத்தான், மாந்திரிகம், அம்மன் சக்தி - சுந்தர்.சி காம்போ வெல்கிறதா?

காவல் அதிகாரியாக இருக்கும் சக்திக்கு (நயன்தாரா) இரவு நேரங்களில் அமானுஷ்யமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் அவரை மயிலாஞ்சி என்னும் ஊருக்குச் செல்லச் சொல்கிறது ஓர் உருவம். பணியிட மாற்றம் வாங்கிக்கொ... மேலும் பார்க்க

நூறு கோடி வானவில் விமர்சனம்: காதலின் எதார்த்தத்தைப் பேசுகிறதா இந்த கலர்புல் சினிமா?

மும்பையிலுள்ள பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கும் வினோத் (ஹரிஷ் கல்யாண்) பதவி உயர்வுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரை கோவாவிலுள்ள லோக்கல் கிளைக்குப் பணிமாற்றம் செய்கிற... மேலும் பார்க்க

காலை 6 மணி சிறப்புக் காட்சி: சீமான் கண்டனத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அதிருப்தி; விளக்கும் சீமான்

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெ... மேலும் பார்க்க

"வடக்கு - தெற்கு பிரிவினையை உருவாக்குகிறீர்கள்" - ஜான்வியின் குற்றச்சாட்டுக்கு ரெஜினா பதில்

சமீபத்தில் கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், தான் நடித்த 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து பேசியிருந்தார். தென்ன... மேலும் பார்க்க