செய்திகள் :

"தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன?

post image

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, " ஏழை எளிய மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போயிருக்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி
ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக ஒரு வலுவான தலைமையை தமிழ்நாட்டுக்கு கொடுக்கும். எம்.ஜி.ஆர் கண்ட கனவுகளையும், ஜெயலலிதாவின் கனவுகளையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிக் கொடுப்பார்" என்றார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் தனுஷ் அதிமுகவில் இணைகிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அளித்த அவர், " அதிமுகவில் யார் இணைந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மன நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தனுஷ் ஒரு முன்னணி கதாநாயகர்.

தனுஷ்

அவருடைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் நடித்த காட்சிகள், அற்புதமான செயல்கள் இருக்கிறது.

அவர் போன்ற நடிகர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்தால் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்காமல் என்ன செய்வோம்?

அவர் அரசியலுக்கு வருவார் என்பது வதந்தியா? அல்லது உண்மையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்" என்று கூறியிருக்கிறார்.

இந்தியா, ரஷ்யா மீதான வரி: தடை நீக்க 60 நாள் அவகாசம் கேட்கும் அதிபர் ட்ரம்ப்! - காரணம் என்ன?

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்திருக்கிறார்.உஸ்பெகிஸ்தான் மற்று... மேலும் பார்க்க

Chennai Rain : 'வரலாறு காணாத மழை!' - சென்னையில் அதிக மழை கொட்டித்தீர்த்த டாப் 10 இடங்கள்!

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையின் கடந்த 24 மணி ... மேலும் பார்க்க

கொல்கத்தா: கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி; துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துா்கா பூஜை பந்தலில் நேற்றிரவு ( அக்.17) இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 25 போ் காயமடைந்திருக்கின்றனர். வடக்கு கொல்கத்தாவில் உள்ள... மேலும் பார்க்க

Chennai Rain: 'முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்!

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை ரிப்பன் பில்டி... மேலும் பார்க்க

Chennai Rain : 'வானிலை மையம் எச்சரித்தது; ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை!' - ஆணையர்

சென்னையில் அதிகனமழை பொழிந்திருக்கிறது. வடசென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணைய... மேலும் பார்க்க

'அனுமதியின்றி அதிகாலை காட்சிகள்; விதிகளை மீறும் தியேட்டர்கள்!' - கண்டுகொள்ளாத தவெக அரசு?

தமிழகத்தில் புதிய படம் வெளியான முதல் ஒரு வாரத்திற்கும் அரசு விடுமுறை நாட்களிலும் திரையரங்குகளில் 9 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குக... மேலும் பார்க்க