செய்திகள் :

`தவெக அரசுக்குக் காலம் தர வேண்டும்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

கோவை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவைக்கு வருவது என்றாலும், தமிழகத்திற்கு வருவதும் என்றாலும் அது ஒரு தனி மகிழ்ச்சி, தனி பூரிப்பு என்பதை மறுக்க இயலாது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், தமிழக மக்களுக்கு எனது அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

விஜய்
விஜய்

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்த கேள்விக்கு, “இது அரசியல் கேள்வி. இதற்கு உரிய பதிலை அரசியல் தலைவர்கள் தருவார்கள்” என பதிலளித்தார். மாணவர்களுக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, “எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேசத்தின் ஒற்றுமையை பாதுகாக்க எல்லா மாணவர்களும் முன்வர வேண்டும். தேசம் ஒன்றாக இருந்தால் மட்டும்தான், உலக அரங்கில் நம் குரல் எடுபடும்” என பதிலளித்தார். த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் உள்ள புதிய அரசுக்குக் காலம் தர வேண்டும் என்பதுதான் உங்களுடைய விருப்பமும், என்னுடைய விருப்பமும்கூட” என பதிலளித்தார்.

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க

"கொளத்தூரும் என் தொகுதிதான்.!" முதல்வர் விஜய் போடும் `மெகா' திட்டம்!

சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை மேம்படுத்த 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் வ... மேலும் பார்க்க

``சோனம் சார் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்; தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை..!" - CJP நிறுவனர்

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இன்று சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 25-வது நாள். 25 நாள்கள் உணவின்றி இருப... மேலும் பார்க்க

'அவதூறு வழக்குகளுக்கு அவசர கைதுகள்!' - இதுதான் ஜனநாயகத்தனமா முதல்வரே?

தவெக அரசு அமைந்த 2 மாதங்களில் அரசியலர்கள் மீதும் சமூகவலைதளவாசிகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்து கைது செய்யும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உதாரணம், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்கண்டேயனுட... மேலும் பார்க்க

``அமைச்சர்கள் 'ஜனநாயகன்' வெளியீட்டு வேலைகளை செய்வது வெட்கக்கேடானது" - டி..டிவி தினகரன் ஆவேசம்!

முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்த உடன், முதல்வர் விஜய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதை... மேலும் பார்க்க