செய்திகள் :

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு... திமுக-வுடன் உறவு!' - கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

post image

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், " ஜனநாயகத்திற்கு மக்கள் ஆதரவு அளித்த நிலையில் த.வெ.கவை ஆதரிப்பது என நாங்கள் முடிவெடுத்தோம். ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவே விஜய்க்கு ஆதரவு அளித்தோம்.

தவெக விஜய்
தவெக விஜய்

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்பது அவசியம். மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம்.

தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் ஒன்றிய பாஜக அரசு கொல்லைப்புறம் வழியே நுழைய முயற்சி செய்கிறது. அதனைத் தடுக்கவே த.வெ.கவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

இன்னொரு தேர்தலைத் தடுக்க, ஆளுநர் ஆட்சி, பாஜக வருகையைத் தடுக்க நாங்கள் த.வெ.கவை ஆதரிக்கிறோம். த.வெ.க அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். த.வெ.கவுடன் கூட்டணி அல்ல, ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு தந்திருக்கிறோம்.

சிபிஐ, சிபிஎம்
சிபிஐ, சிபிஎம்

த.வெ.க ஆட்சி அமையக் கூடாது என்று ஸ்டாலின் கூறவில்லை. ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறிக்கும்போது திமுகவுடன் இணைந்து போராடுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி 11 சீட்டுகளுக்குத்தான் பிற கட்சிகளின் உதவியை நாடி வந்தது தவெக. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, ஆளுநர் கேட்ட... மேலும் பார்க்க

சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூற... மேலும் பார்க்க

'ஜோசப் விஜய் எனும் நான்...' - ஆதரவு கொடுத்த விசிக, கம்யூக்கள், இ.யூ.எம்.எல்; முதல்வராகும் விஜய்!

தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளு... மேலும் பார்க்க

'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' - ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காததையடுத்து, புதிய ஆட்சி அமைவது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ம... மேலும் பார்க்க

"அதிமுக, திமுக கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சேர்ந்து ஆட்சி அமைக்க..!" - சசிகலா காட்டம்

திமுக - அதிமுக கூட்டணி என்கிற பேச்சு கடந்த இரண்டு நாள்களாக எழுந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட... மேலும் பார்க்க

விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த சிபிஐ! - ஆதரவு கடிதத்தில் உள்ளது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க