"நீட் தேர்வு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்" - காரணத்தை விளக்கும் அன்...
திங்கள், வெள்ளை நிறம், மேற்கு திசை... கடக ராசிக்கு நிச்சய வெற்றி தரும் 15 அதிர்ஷ்ட குறிப்புகள்!
கடகத்துக்கு அதிபதி சந்திரன். கடகம் ஜலராசி; சர ராசி. நண்டு வடிவம் கொண்டது. இந்த ராசியில் குருபகவான் உச்சம் பெற்றிருப்பார். செவ்வாய் நீசம் அடைவார். ராசி சக்கரத்தின் 90 முதல் 120 பாகை வரை கடகம் பரவியிருக்கும்.

1. த்ரிகோணமான 5-ஆம் (விருச்சிகம்) ராசிக்கும், கேந்திரமான 10-ம் (மேஷம்) ராசிக்கும் அதிபதியாக இருக்கும் செவ்வாய், கடகத்துக்கு யோககாரகனாக மாறி நல்ல பலன்களை அளிக்க வாய்ப்பு உண்டு.
2. கடக ராசிக் காரர்கள், எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே தங்களின் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவார்கள். மற்றவர்களை தங்கள் கருத்துக்குக் கட்டுப்பட வைப்பதில் வல்லவர்.
3. அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். அலுவலகமோ, சொந்தத் தொழிலோ மேலான அதிகாரத்தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்யும் ஆளுமை உண்டு.
4. உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் வெகுவிரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள்.
5. கடக ராசியில் பிறந்த நீங்கள், பிரச்னைகளையும் சவால் களையும் கண்டு மலைக்கமாட்டீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீடு துலாம். அந்த ராசிக்கு அதிபதி சுக்ரன். அவர் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள்.
6. பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது உங்களுக்கு நன்மை தரும். இதுவே உங்களுக்குப் பரிகாரமாக மாறும் யோகத்தை அளிக்கும்.
7. நீங்கள் வாங்க நினைக்கும் சொத்துகளைப் பொறுத்தவரையிலும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது.

8. உங்களுடைய வாழ்க்கைத் துணையைப் பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு... அதாவது மகரத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும்.
9. உங்களுக்கு 8-ம் இடம் ஆயுள் ஸ்தானம் - கும்ப ராசி. இதற்கும் சனியே அதிபதி. ஆதலால், தீர்க்காயுள் உண்டு.
10. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர்கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களின் மீது பாசம் உண்டு. ஆனால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்காது.
11. கடக ராசிக்காரர்கள், பெரும்பாலும் பூர்வீகச் சொத்து கைக்கு வரும் அமைப்பு உள்ளவர்கள். கடும் உழைப்பாளிகள். இவர்களுக்கு 49 வயதுக்கு மேல் சொந்தவீடு அமையும் யோகம் வாய்க்கும்.
12. இவர்களின் ராசி அதிபதி சந்திரன் என்பதால் விரைவில் சொந்த வீடு அமைய, சந்திரனைத் தலையில் சூடியிருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும். இவர்களின் வீடு கோயிலுக்கு அருகிலோ, கோயிலுக்குப் பின்புறத்திலோ இருந்தால் சிறப்பானதாக இருக்கும். இவர்கள் இருக்கும் வீட்டில் எப்போதும் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.
13. இந்த ராசிக்கான அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், பழுப்பு. அதிர்ஷ்ட பூக்கள்: பூக்களில் நந்தியாவட்டை. மருதாணிப்பூ, முல்லை போன்றவை கடக ராசிக்கு அதிர்ஷ்டம் தரும். இவர்களுக்கு மேற்கு திசை சிறப்பு தரும்.
14. நாள்-கிழமை எனில்... திங்கள் மற்றும் வியாழக் கிழமை அன்று புதிய காரியங்களை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம். இந்தக் கிழமைகள் உங்களுக்கு மிகவும் யோகம் தருவதாக அமையும். 2, 11, 20 ஆகியவை அதிர்ஷ்ட தேதிகள். இந்தத் தேதிகளில் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கைகூடும்.
15. கடக ராசிக்காரர்கள் ஆபரணங்களில் முத்து பயன்படுத்தலாம். நீர் நிலைகள் சார்ந்த தொழில்கள் இந்த ராசியினருக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். சங்கு, மீன் தொடர்பான தொழில்களில் ஏற்றமும் நல்ல லாபமும் உண்டு. நெல் போன்ற தானியங்களை விவசாயம் செய்வது, விற்பது, ரைஸ்மில் போன்ற தொழில்களும் மிகுந்த லாபத்தைப் பெற்றுத் தரும்.




















