செய்திகள் :

திண்டுக்கல்: கிளம்பி சென்ற அதிகாரியை தடுத்து நிறுத்தி கல்குவாரியை மூட தீர்மானம்!

post image

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுசத்திரம் சமுதாயக் கூடத்தில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிளார்க் செந்தில்  தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

 இந்த கிராம சபை கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கலந்து கொண்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் விவசாயம் , குடிநீர் ஆதாரங்கள் அப்பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியால் பாதிப்படைந்து விட்டதாகவும், அதனால் அந்த கல்குவாரியை மூட தீர்மானம் நிறைவேற்ற சுமார் அறநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட மனுவினை கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் கண்டிப்பாக கல்குவாரி வேண்டும் என்று சிலரும் கையெழுத்திட்டு மனு கொடுத்திருந்தனர்.

கூட்டத்தை நடத்திய அலுவலர் தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு பதிலாக மன்றம் பரிந்துரைக்கிறது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினர். 

இது தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரெட்டியார்சத்திரம்  வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் முருகன் கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.

திண்டுக்கல் குவாரி மூட தீர்மானம்

வட்டார வளர்ச்சி அலுவலரும் முதலில் தீர்மானம் என்ற வார்த்தைக்கு பதிலாக மன்றம் பரிந்துரைக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பொதுமக்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்ற வார்த்தை சேர்க்குமாறு கூறியதனை தொடர்ந்து கல்குவாரி வேண்டும் என கூறிய நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் இரு தரப்பினருக்கும் நேரடி வாக்குவாதமாக மாறியது. உடனே வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கிருந்து கிளம்ப முயன்றார்.

பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி தீர்மானம் நிறைவேறியதும் கிளம்புங்கள் என கூறியதனை தொடர்ந்து ஒருவழியாக கல்குவாரியை மூடும் தீர்மானத்தை நிறைவேறியதாக அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.!

செவிலியர்கள் போராட்டம்: ``ஈவு இரக்கமின்றி கைது செய்ய எப்படி மனம் வந்ததோ?" - ஸ்டாலின் கண்டனம்

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக ஆ... மேலும் பார்க்க

மாணவியிலிருந்து போராட்டத்தின் முகமாக.! - ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் நேஹா போரா - யார் இவர்?

இந்தியாவின் சமீபத்திய மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களில் கவனம் பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார் நேஹா போரா. மாணவர் அரசியல், கல்வி உரிமை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து குரல் எ... மேலும் பார்க்க

தவெக: `` என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" - சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா தொடர்பாக இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படு... மேலும் பார்க்க

``செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு..!" - எம்.பி கனிமொழி

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராடி வந்தனர். சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு! - 26 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை | Live

தொடங்கியது வாக்குப்பதிவு!தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1,15,... மேலும் பார்க்க

'படிவம் 6-ஐ மாற்றியது யார்?' - ராகுல் குற்றச்சாட்டு; Fact Check என மறுத்த ஆணையம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 'படிவம் 6'-ஐ தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் மாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை இந்த... மேலும் பார்க்க