செய்திகள் :

செவிலியர்கள் போராட்டம்: ``ஈவு இரக்கமின்றி கைது செய்ய எப்படி மனம் வந்ததோ?" - ஸ்டாலின் கண்டனம்

post image

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜூம் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு போராட்டக்காரர்கள் வலுகட்டாயமாக கைது செய்ய முயற்சிக்கப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றன.

இதற்கிடையில், `நவம்பர் 3ஆம் தேதிக்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும்' என்ற எச்சரிக்கையுடன் செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

செவிலியர்கள் மீதான நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், ``கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ?

போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு; தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை!

செவிலியர்கள் போராட்டம்

முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’?

இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா? போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மாணவியிலிருந்து போராட்டத்தின் முகமாக.! - ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் நேஹா போரா - யார் இவர்?

இந்தியாவின் சமீபத்திய மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களில் கவனம் பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார் நேஹா போரா. மாணவர் அரசியல், கல்வி உரிமை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து குரல் எ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கிளம்பி சென்ற அதிகாரியை தடுத்து நிறுத்தி கல்குவாரியை மூட தீர்மானம்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுசத்திரம் சமுதாயக் கூடத்தில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிளார்க் செந்தில் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இந்... மேலும் பார்க்க

தவெக: `` என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" - சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா தொடர்பாக இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படு... மேலும் பார்க்க

``செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு..!" - எம்.பி கனிமொழி

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராடி வந்தனர். சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு! - 26 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை | Live

தொடங்கியது வாக்குப்பதிவு!தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1,15,... மேலும் பார்க்க

'படிவம் 6-ஐ மாற்றியது யார்?' - ராகுல் குற்றச்சாட்டு; Fact Check என மறுத்த ஆணையம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 'படிவம் 6'-ஐ தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் மாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை இந்த... மேலும் பார்க்க