"விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போத...
பெத்லகேம் குடும்ப யூனிட்: ``ரூ300 கோடி வசூல்... அதில் பாதிகூட எங்களுக்கு கிடைக்காது" - பஹத் பாசில்
இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி - மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான `பெத்லகேம் குடும்ப யூனிட்' படம், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் பஹத் பாசில், இயக்குநர் திலீஷ் போத்தன் உள்ளிட்டோரின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்தது. இந்த நிலையில் தனியார் சேனலுக்கு நடிகர் பஹத் பாசில் பேட்டியளித்திருந்தார்.

அதில் பேசிய அவர், ``பெத்லகேம் குடும்ப யூனிட் ரூ.300 கோடி வசூலித்திருக்கிறது. ஆனால், இதில் பாதி அளவுகூட எங்கள் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்காது. அது மொத்த வசூல் (Gross Collection) மட்டுமே. பெத்லஹேம் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல; இயக்குநர் கிரீஷ், ஷ்யாம் மற்றும் திலீஷ் ஆகியோர் இணைந்து பெற்ற கூட்டு வெற்றி" என்றார்.
பொதுவாக ஒரு திரைப்படத்தின் மொத்த வசூலில் பாதியளவு சர்வதேச முகவர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்குச் சென்றுவிடும். அதன்பின், அரசுக்குச் செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற வரிகள் கழிக்கப்பட்ட பிறகே மீதமுள்ள தொகை தயாரிப்பாளர்களின் கைக்கு வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb


















