செய்திகள் :

'திமுக ஒரு ஆமை; உதயநிதி அப்டேட்டே ஆகவில்லை!' - ஜெயக்குமார் கடும் தாக்கு!

post image

2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் இரண்டரை மாதங்களே இருக்கிறது. இந்நிலையில், இன்று (15.12.2025) முதல் அதிமுக விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய தொடங்கியிருக்கிறது. இன்று மதியம் 12 மணிக்கு ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில் தொடங்கிய விருப்ப மனு விநியோக நிகழ்வில், விண்ணப்பங்களை பெற அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

ஒரு விருப்ப மனுக்கான கட்டணமாக 15000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முதல் விருப்ப மனுவை சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பி.கந்தன் வாங்கியிருந்தார். அவர் பேசுகையில், 'பொதுக்குழுவில் கூறியதை போல 210 தொகுதிகளில் வெல்வோம். திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்.

எந்தக் கட்சிக்கும் இப்படியொரு எழுச்சி இல்லை. என்னுடைய சோழிங்கநல்லூர் தொகுதியில் எனக்காகவும், அண்ணன் பழனிசாமிக்காக எடப்பாடி தொகுதிக்கும் என இரண்டு விருப்ப மனுக்களை வாங்கியிருக்கிறேன்' என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், 'விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளே பெரும் எழுச்சியை பார்க்க முடிகிறது. இந்த எழுச்சியை பார்க்கையில் ஒரு மகத்தான வெற்றியை பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்.

அதிமுக முன் கூட்டியே விருப்ப மனு வாங்கினால் திமுகவுக்கு என்ன? அதை ஏன் அவர்கள் விமர்சிக்கிறார்கள்? அவர்கள் ஆமையாக இருக்கலாம். ஆமை வேகத்தில் செல்கிறார்கள். எங்களை பார்த்து ஆமைகளுக்கு என்ன விமர்சனம்?

அதிமுகவை உறிஞ்சு உண்டு கொழுத்து இங்கிருந்து திமுகவுக்கு சென்றவர்கள்தான் இன்றைக்கு ஸ்டாலினை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்..

நீராவி இரயிலுக்குதான் எஞ்சின் தேவை. புல்லட் ரயிலுக்கு எதற்கு எஞ்சின் தேவை? அப்டேட் இல்லாத உதயநிதி அவரை அவரே கேவலப்படுத்திக் கொள்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. எல்லா கட்சிகளைப் போலவும் பாஜகவும் அதிக சீட்தான் கேட்கும். அதைப்பற்றியெல்லாம் என்னால் சொல்ல முடியாது. சரியான சமயத்தில் தலைமை அறிவிப்பார்கள்.

வெற்றியோ தோல்வியோ நான் எங்கும் எந்த கட்சிக்கும் மாறவில்லை என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன்.

மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. எனக்கு எப்போதும் ராயபுரம்தான்.

பிரிந்து சென்றவர்களை இணைப்பதைப் பற்றி நான் முடிவெடுக்க முடியாது. தலைமைதான் கூற வேண்டும்' என்றார்.

டிசம்பர் 23 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது.

100 நாள் வேலை திட்டம் : அறிமுகமாக இருக்கும் புதிய நடைமுறைகள் என்னென்ன?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - இந்திய அரசியல் களத்தில் இப்போதைய தலைப்பு செய்தி. 2008-ம் ஆண்டு முதல், இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தை 'மகாத்மா காந்தி... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டத்தில் 'மகாத்மா காந்தி' பெயர் இல்லையா? - வலுக்கும் சர்ச்சை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மாற்றத்திற்கு எதிராக தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. பயிர்காலம் அல்லாத நேரங்களில் இந்திய கிராமப்புறங்களுக்கு பேருதவியாக இருந்து வ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம் - கோவை திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவா?

திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதிமுக, பாஜக தொடங்கி தவெக வரை அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த திமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் வருகை - 2 அடுக்கு பாதுகாப்பு; `ரெட் ஸோன்' அறிவிப்பு

வேலூர் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி தங்கக் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தைத் திறந்துவைப்பதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (17-12-2025) வேலூர் வருகிறார். ... மேலும் பார்க்க

ஈரோட்டில் விஜய் பிரசார பொதுக்கூட்டம்: மைதானம் சீரமைப்பு, முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம் | Photo Album

தவெக பிரசார பொதுக்கூட்டம் மைதானம், ஈரோடு, பெருந்துறை.தவெக பிரசார பொதுக்கூட்டம் மைதானம், ஈரோடு, பெருந்துறை.தவெக பிரசார பொதுக்கூட்டம் மைதானம், ஈரோடு, பெருந்துறை.தவெக பிரசார பொதுக்கூட்டம் மைதானம், ஈரோடு,... மேலும் பார்க்க

உதவித்தொகை: ``வாங்கி சாப்பிட்டு, எதிராக வாக்களித்து நன்றி மறந்துவிட்டனர்'' -கேரள CPM மூத்த நிர்வாகி

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த 13-ம் தேதி வெளியாயின. என அதில் மொத்தம் உள்ள ஆறு மாநகராட்சிகளில் நான்கு மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஒரு மாநகராட்சியை சி.பி.எம் கூட்டணியும், ... மேலும் பார்க்க