செய்திகள் :

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து உடைத்து மர்ம நபர்கள்; பாஜகவைக் கண்டிக்கும் அபிஷேக் பானர்ஜி

post image

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணிக்குச் சென்றுவிட்டனர். இன்று கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை காலையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். சிலர் அலுவலகத்தில் இருந்த டிவி மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களைத் தூக்கிச்சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தனது X தளத்தில் இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து, "அதிகாலை 4.30 மணியளவில், கொல்கத்தாவின் மையத்தில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தை ஆயுதங்களுடன் பாஜக குண்டர்கள் முற்றுகையிட்டனர்.

பொருட்களை எடுத்துச்செல்லும் மர்ம நபர்கள்
பொருட்களை எடுத்துச்செல்லும் மர்ம நபர்கள்

அவர்கள் எங்கள் கட்சி தொண்டர்களைத் தாக்கினர், அவர்களின் தொலைபேசிகளைப் பறித்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். வளாகத்தைச் சூறையாடி மின்னணு உபகரணங்களைச் சேதப்படுத்தினர்.

கொல்கத்தா காவல்துறை எங்கே இருந்தது? கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், எங்கள் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் பலமுறை போன் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் எந்தப் பதிலும் இல்லை. இது மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அபிஷேக் பானர்ஜி பகிர்ந்த வீடியோக்களில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த நபர்கள் டிவி திரைகள் மற்றும் பிற உபகரணங்களை அலுவலகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது.

ஆனால் இத்தாக்குதலில் தங்களது கட்சிக்குத் தொடர்பு இல்லை என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தேவையில்லாமல் பா.ஜ.க மீது குற்றம் சாட்டுவதாகவும் பா.ஜ.க தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க