செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "பிடிவாதத்தை கைவிட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும்"- அண்ணாமலை

post image

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்திருக்கிறது. இது குறித்து வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`21-ம் நூற்றாண்டு எட்டப்பர்கள்' Vs `மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல மாட்டோம்' திமுக - காங் வார்த்தை போர்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பைத் தொடர்ந்து, 'தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகிவரும் எட்டப்பர்கள், கைப்புள்ள, வீர வசனம் பேசியவர்களின் அந்தர் பல்டி' என்று தி.மு.க-வை மாணிக்கம் தாக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்; இறுகிய பிடி... தவெக எம்எல்ஏ கைதில் நடந்தது என்ன?!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேசிய ... மேலும் பார்க்க

'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்; வேறு வழியின்றி TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்'- ஸ்டாலின்

மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக வெடித்த விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "தவெக அரசின் சர்வாதிகார ஆணவத்திற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி"- நயினார்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே... மேலும் பார்க்க

BREAKING: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக வெடித்த விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?" - திருமா

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க