செய்திகள் :

`ராஜினாமா செய்ய மாட்டேன்!'- அடம்பிடிக்கிறாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? என்ன நடக்கிறது?

post image

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெடித்திருக்கும் விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல்ரீதியாகவும் நெருக்கடிகள் அதிகரித்துவருவதால் அருள் விக்னேஷை ராஜினாமா செய்யவைக்க திட்டமிடுகிறது த.வெ.க தலைமை. ஆனால், ``நான் ராஜினாமா செய்ய மாட்டேன்" என அருள் விக்னேஷ் அடம்பிடிப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், ``பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படும் விவகாரத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது காவல்துறை. அருள் விக்னேஷ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ பதவியை இழக்கவும் நேரிடும். இதற்கிடையில் 'அருள் விக்னேஷை த.வெ.க தலைமை காப்பாற்றுகிறது' என எதிர்க்கட்சிகள் ஓங்கி அடிப்பதால், எம்.எல்.ஏ பதவியிலிருந்து அவரை ராஜினாமா செய்ய வைத்துவிடலாம் என முதல்வருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் மூத்த அமைச்சர்கள்.

முதல்வரும் அதற்கு இசைவு தெரிவிக்கவே... அருள் விக்னேஷை அணுகியது த.வெ.க தலைமை. ஆனால், 'நான் ராஜினாமா செய்ய மாட்டேன்... நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை' எனச் சொல்லி வருகிறாராம், அருள் விக்னேஷ். இந்நிலையில், அடம்பிடிக்கும் எம்.எல்.ஏ-விடம் நாசுக்காகப் பேசி ராஜினாமா செய்ய வைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்களாம் அமைச்சர்கள்" என்றனர்.

முதல்வர் விஜய்

நம்மிடம் பேசிய த.வெ.க நிர்வாகிகளோ, "அருள் விக்னேஷ் கைதாகும் முன்பே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். அருள் விக்னேஷ் அதற்கு ஒத்துழைப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் அவரை எப்படியாவது ராஜினாமா செய்ய வைத்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது கட்சித் தலைமை. அதன் பிறகு அவர் கைதாகவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் உயர் நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறது என்பதையும் கூர்ந்து கவனித்துவருகிறோம்" என்றனர்.

`குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 15 நாள்கள் விடுப்பு' - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - முழு விவரம்!

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, குழந்தை பிறக்கும் காலகட்டத்தில் 15 நாள்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இ... மேலும் பார்க்க

இனி ஆண் பணியாளர்களுக்கும் `மகப்பேறு விடுப்பு' - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு... விவரம் என்ன?

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாள்கள் ‘தந்தையர் மகப்பேறுகால விடுப்பு’ வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசாணையின் செய்தி வெளியீட்டி... மேலும் பார்க்க

Kallakurichi TVK MLA: விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி; யார் இந்த சிருஷ்டி சிங் IPS?

தமிழ்நாட்டு அரசியலையும் தாண்டி இந்திய அளவில் அரசு நிர்வாக அதிகாரிகளின் மத்தியிலும் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது ஆபாசக் குறுஞ்செய்தி தொடர்பான கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னே... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர், தலைமைச் செயலாளருக்கு பரந்தாமன் கடிதம்!

அமைச்சர் ராஜ்மோகன் கடந்த 1-ம் தேதி ஒரு விழாவில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பொறுப்புக்கு ஒருவர் ரூ.5 கோடி கொடுக்க முன்வந்ததாகவும், அது லயோலா மணிக்கு மட்டுமே தெரியும் எனக் குறிப்பிட்டு பேசியி... மேலும் பார்க்க

நெல்லை: படகு சவாரியுடன் புதுப்பொலிவு பெறும் டவுன் நயினார் குளம்; துவக்கி வைத்த அமைச்சர் | Photos

நெல்லை: படகு சவாரியுடன் புதுப்பொலிவு பெறும் டவுன் நயினார் குளம்! துவக்கி வைத்த அமைச்சர் ராஜேஷ்குமார்நெல்லை: படிக்கட்டில் இறந்து கிடந்த சிசு; கர்ப்பத்தை மறைத்து இளம்பெண்ணுக்கு திருமணம் - நடந்தது என்ன? மேலும் பார்க்க

புதுச்சேரி காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம்!

புதுச்சேரி காவல்துறை நிகழ்ச்சிபுதுச்சேரி காவல்துறை நிகழ்ச்சிபுதுச்சேரி காவல்துறை நிகழ்ச்சிபுதுச்சேரி காவல்துறை நிகழ்ச்சிபுதுச்சேரி காவல்துறை நிகழ்ச்சிபுதுச்சேரி காவல்துறை நிகழ்ச்சிபுதுச்சேரி காவல்துறை... மேலும் பார்க்க