"மாநில உரிமைகளுக்காக கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக, ஆன...
திருப்பரங்குன்றம்: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” - உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மோடி பதிவு
கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது.
ஆனால், அந்த உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் அருகே உள்ள தீப மண்டபத்தில் மாலை தீபம் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அமல்படுத்தவில்லை, எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி. பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (நவ. 27) விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இன்று (நவ. 29) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பதிவிட்டிருக்கிறார்.
















