செய்திகள் :

திருப்பரங்குன்றம்: Red Zone-ஆக அறிவிக்கப்பட்ட மலைப் பகுதி; குவிக்கப்பட்ட போலீஸ்... விவரம் என்ன?!

post image

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்றலாம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரும் வகையிலான சீராய்வு மனுவினை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருக்கிறது. நாளை கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவிருக்கும் நிலையில், திருப்பரங்குன்றத்தில் சற்றே பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழ்நாடு அரசு, `திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது நில அளவைக்கல்தான்!' என ஆதாரத்தை வெளியிட்டு, விளக்கியிருக்கிறது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் மதுரை மாநகரக் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இதன் ஒரு பகுதியாக, ட்ரோன் விதிகள் 2016-ன் விதி 24-ன் கீழ், 23.11.2026 முதல் 24.11.2026 வரை திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட மலை முழுவதும், கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் (UAV) பறக்கத் தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக (RED ZONE) அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த நாள்களில் அனுமதி இன்றி ட்ரோன்கள் இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ட்ரோன்களை இயக்க வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும்.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

'திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!' - தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்!

கார்த்திகை தீப தினமான நாளை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அ... மேலும் பார்க்க

'முக்கிய தகவல்களைப் பகிர WhatsApp Web பயன்படுத்துவதைத் தவிருங்கள்..!'- மத்திய அரசு அறிவுறுத்தல்

பொது இடங்களில் உள்ள கணினிகள் மற்றும் அலுவலகங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் கணினிகளில் 'வாட்ஸ்அப் வெப்' பயன்படுத்துபவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி விவகாரம்: `எங்களிடம் புகார் வந்தது!' - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூற‌ப்படும் விவகாரத்தில் நாளொரு தகவல் வெளியாகி வருவது குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது.உண... மேலும் பார்க்க

`கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா?'- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆட்சிய... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "தீபம் ஏற்றாவிட்டால், தவெக அரசைக் கலைக்க வேண்டும்!" - எச்சரிக்கும் இந்து முன்னணி

உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா அல்லது கடந்த காலத்தைப்போல் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத நிலை ஏற்பட்டுவிடுமா... என்ற திக் திக் சூழ்நிலை நிலவி வருகிறது... மேலும் பார்க்க

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 'பவர்' யார்? 3-வது இடத்தில் இந்தியா; சறுக்கிய ட்ரம்ப்.. செக் வைத்த சீனா

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரக் களத்தில் யார் கரம் ஓங்கியிருக்கிறது என்பதை ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சர்வதேச கொள்கை ஆய்வு நிறுவனமான ‘லோவி இன்ஸ்டிடியூட்’ (Lowy Institute), தனது '2026 ஆசியா பவர் ... மேலும் பார்க்க