செய்திகள் :

"தீயசக்தி, தூயசக்தி எம்எல்ஏக்களுக்கு கடன் வாங்கி இலவச Car எதற்கு?" - முதல்வர் விஜய்யைச் சாடிய சீமான்

post image

110 விதியின் கீழ் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் நேற்று (ஆகஸ்ட்.19) சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது. அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?

ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?

 ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜுனா

அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா?

விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களைத் தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா?

மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவைதானா?

தேர்தல் பரப்புரையில் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

`காவிரி, தொகுதி மறுவரையறை, நீட்.!' - அமித் ஷா முன் முதல்வர் விஜய் பேசியது என்ன? | முழு விவரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது 'தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு' சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா ... மேலும் பார்க்க

"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருந்துகிறார்கள்" - முன்னாள் அமைச்சர் பொன்முடி

தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, தொண்டர்கள் விழுப்புரம் அறிவாலயத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ... மேலும் பார்க்க

``ஈரான் மீது 'வரலாறு காணாத' பொருளாதாரத் தடை; ஈரானுக்கு உதவும் நாடுகளும்..." - எச்சரிக்கும் ட்ரம்ப்

ஈரான் மீது இதுவரையில் இல்லாத அளவிலான கடுமையான பொருளியல் தடைகளையும், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் ப... மேலும் பார்க்க

மேகதாது: 'நதிநீர் பங்கீடு அல்ல, நதிநீர் ஒத்துழைப்பு... நாம் நகர வேண்டிய நேரம்!" - டி.கே.எஸ் பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது 'தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு' சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா ... மேலும் பார்க்க

``மோடியை விடவும் கொடுமையான செயலை ராகுல் செய்கிறார் எனும்போது.!" - திமுக இரா.ராஜீவ்காந்தி பேட்டி

த.வெ.க அரசு அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து, 'கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி' என கடுமையாக விமர்சித்தது தி.மு.க. தொடர்ந்து வி.சி.க., கம்யூனிஸ்ட்டு... மேலும் பார்க்க

`அமித் ஷாவை நானே நேரில் வரவேற்கிறேன்.!' - முதல்வர் விஜய்யின் திடீர் முடிவு! பின்னணி என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ள நிலையில், அவரை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கோவளத்தில் இன்று நடைபெறும் 31... மேலும் பார்க்க