செய்திகள் :

"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருந்துகிறார்கள்" - முன்னாள் அமைச்சர் பொன்முடி

post image

தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, தொண்டர்கள் விழுப்புரம் அறிவாலயத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எப்போதும் எந்த வயதிலும், தி.மு.க.வின் கொள்கைக்காக பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட இயக்கச் சிந்தனைகளைப் பரப்பி அதை வேரூன்ற செய்தவர் நம் தலைவர் ஸ்டாலின்.

அவருடைய வழியில் நானும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நான் சர்ச்சையாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

பொன்முடி
பொன்முடி

அந்த நிகழ்ச்சியில் அப்படிப் பேசியதற்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டிருக்கிறேன். அதேபோல இந்த வழக்கைத் தொடர்ந்த சகோதரியிடமும் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்திருந்தேன். நம் தலைவர் ஸ்டாலின் மக்களிடையே மிகச் செல்வாக்கு பெற்று வருகிறார். த.வெ.க-வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

அந்த அளவுக்குத் தற்போதிருக்கும் அரசியல் சூழலை மக்களே உணர்ந்து வருகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கெல்லாம் விரைவில் பதில் வரும். கல்லூரி மாணவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்" என்றார்.

``ஈரான் மீது 'வரலாறு காணாத' பொருளாதாரத் தடை; ஈரானுக்கு உதவும் நாடுகளும்..." - எச்சரிக்கும் ட்ரம்ப்

ஈரான் மீது இதுவரையில் இல்லாத அளவிலான கடுமையான பொருளியல் தடைகளையும், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் ப... மேலும் பார்க்க

மேகதாது: 'நதிநீர் பங்கீடு அல்ல, நதிநீர் ஒத்துழைப்பு... நாம் நகர வேண்டிய நேரம்!" - டி.கே.எஸ் பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது 'தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு' சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா ... மேலும் பார்க்க

``மோடியை விடவும் கொடுமையான செயலை ராகுல் செய்கிறார் எனும்போது.!" - திமுக இரா.ராஜீவ்காந்தி பேட்டி

த.வெ.க அரசு அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து, 'கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி' என கடுமையாக விமர்சித்தது தி.மு.க. தொடர்ந்து வி.சி.க., கம்யூனிஸ்ட்டு... மேலும் பார்க்க

`அமித் ஷாவை நானே நேரில் வரவேற்கிறேன்.!' - முதல்வர் விஜய்யின் திடீர் முடிவு! பின்னணி என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ள நிலையில், அவரை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கோவளத்தில் இன்று நடைபெறும் 31... மேலும் பார்க்க

”விஜய்யின் மெளனம் மலையை விடக் கடினமானது; அவர் பேசினால்...” - என்ன சொல்கிறார் நஞ்சில் சம்பத்?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாகத.வெ.க பரப்புரை... மேலும் பார்க்க

தவெகவுக்கு முன்னாள் அதிமுக வேட்பாளர்; அதிமுகவுக்கு முன்னாள் திமுக வேட்பாளர்! - இது எடப்பாடி ஸ்கெட்ச்

பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் தவெக இடையிலான போட்டி புதிய அரசியல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன... மேலும் பார்க்க