உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கே...
தூத்துக்குடி: சீனப் பட்டாசுகள் திருட்டு வழக்கு; த.வெ.க நிர்வாகி உட்பட 9 பேர் கைது – பின்னணி என்ன?
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வந்த ஒரு கண்டெய்னரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சரக்குப் பெட்டகத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கண்டெய்னரை பறிமுதல் செய்து சட்ட விரோதமாக சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

பின்னர், அந்த கண்டெய்னரை சீல் வைத்து துறைமுகம் சாலையில் உள்ள தனியார் குடோனில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்த நிலையில், நீதிமன்ற விசாரணைக்காக கடந்த மே மாதம் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிபதி முன்னிலையில் திறந்தபோது அந்த சரக்குப் பெட்டகத்தில் இருந்த 607 பட்டாசு பைகளும், 4 சிலிக்கான் பசை பைகளும் காலியாக இருந்தன.
பட்டாசுக்குப் பதிலாக அந்த பைகளில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த தனியார் குடோனின் மேலாளர் ஜான் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். கடந்த இரண்டு மாதமாக நடத்திய விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த த.வெ.க வழக்கறிஞர் அணி அமைப்பாளரான ஜேசுதாஸ், ஆதிநாகலிங்கம், கோவிந்தசாமி, ராஜா, ஜெயகிருஷ்ணன், இம்மானுவேல், அனுஜித் ஜான்சன், சக்தி விஜய் ஆகிய 9 பேரும் சீனப் பட்டாசுகளை திருடி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

அதையடுத்து, 9 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில் த.வெ.க நிர்வாகியான ஜேசுதாஸை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் சாமுவேல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.















