செய்திகள் :

தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ”எனது மகனை இதே வகுப்பில் பயிலும் 9 மாணவர்கள் அவ்வப்போது ராகிங் செய்து வந்துள்ளனர். அத்துடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக என் மகனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான என் மகன் பல நாட்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தான்.

விளாத்திகுளம் காவல் நிலையம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மகனுக்கு உடல் நிலை பாதிக்கபட்டபோது அவனிடம் விசாரித்தோம். அப்போதுதான் சக மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை தெரிந்து கொண்டோம். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரை வகுப்பறையில் நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் ரப்பர் பேண்ட், ஸ்கேல் ஆகியவற்றால் கொடூரமாக அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியும், பபிள்கான் ஒட்டியும் சித்ரவதை செய்துள்ளனர். இதனையடுத்து 9 மாணவர்களையும் கைது செய்த போலீஸார் தூத்துக்குடி சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்தும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளாத்திகுளம்

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராணியிடம் பேசினோம், “கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு இந்த தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் கிராபட் வகுப்பின் போது ஆசிரியருக்கு தெரிந்துள்ளது. அவர்தான் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.  

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க