செய்திகள் :

'தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளும் இணையுமா?' - அஜித் பவார் மனைவியின் மழுப்பல் பதில் என்ன?

post image

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. அஜித்பவார் தலைமையில் ஓர் அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஓர் அணியும் செயல்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித்பவார் விமான விபத்தில் இறந்துவிட்ட நிலையில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் வேலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித்பவார் மனைவியும், துணை முதல்வருமான சுனேத்ரா பவார் இன்றி மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து இது குறித்து பேசியுள்ளனர்.

இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரை அஜித்பவாரின் மகன் பார்த் பவார் இரு முறை சந்தித்து இணைப்பு குறித்து பேசி இருக்கிறார். இதனால் இரு கட்சிகளும் விரைவில் ஒன்றாக இணையும் என்று பேச்சுவார்த்தை அடிபடுகிறது. இது குறித்து இன்று சுனேத்ரா பவாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

சரத்பவார்

சுனேத்ரா பவார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நிருபர்களைச் சந்தித்தபோது ஒரு நிருபர், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக இணையுமா என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சுனேத்ரா பவார், ''மக்கள் இதில்(கட்சி இணைப்பு) அதிக ஆர்வம் காட்டுவது எனக்கு தெரியும். நேரம் வரும்போது இது தெளிவாகும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

அஜித்பவார் மகன் பார்த் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் செயல்தலைவர் பிரபுல் பட்டேல் ஆகியோர் சரத்பவாரைச் சந்தித்து பேசியது அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்குத்தான் என்று தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் அஜித்பவார் கட்சியின் முத்த தலைவர் சுனில் தட்கரே இரு அணிகளின் இணைப்பு குறித்து கூறுகையில், ''அஜித்பவார் உயிரோடு இருந்தபோது இரு அணிகளையும் ஒன்றாகக் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். இணைப்பு குறித்த விவாதங்கள் நடந்ததாகவும், அஜித் பவார் அது குறித்து தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளும் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறு பற்றிய பேச்சுவார்த்தை சமீபகாலமாக நடந்து வருகிறது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவாரும் இதனை ஆதரித்தார். ஆனால் அஜித்பவார் இறந்து போனதால் இணைப்பு முயற்சி தடைபட்டது''என்று தெரிவித்தார்.

தடுமாறும் நெதன்யாகு: `உள்நாட்டுப் போர் அபாயம்' - பதவியைக் காக்க இரட்டை முகம்!

அக்டோபரில் நடந்த தேர்தலில் தனது ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்த நிலையில், இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒருபுறம் தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே, மறுபுறம் தனக்கு எதிரா... மேலும் பார்க்க

'ராகுல் காந்தி தன் 7வது பிறந்தநாளை தனிமையில் கொண்டாட காரணம்...' - நினைவுகளைப் பகிர்ந்த சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது பழைய நினைவுகளைப் பகிரும் வகையில் எழுதப்பட்ட 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற புத்தகத்தில் இந்தியாவில் தனது பழைய நினைவுகளை அதிக அளவில் பகிர்ந்துள்ளார். அ... மேலும் பார்க்க

ஆபாசக் குறுஞ்செய்தி? ``ஆட்சியரே புகார் அளித்தால்தான் நடவடிக்கையா?" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை. ஏராளமானோர் காணாமல் போகிறார்கள், குறிப்பாக குழந்தைகள் பலர் காணாமல் ... மேலும் பார்க்க

'சந்திக்கும்போது முகத்தைத் திருப்பிக்கொள்வார்'- மோடியைப் பற்றி சோனியா காந்தி என்ன எழுதியிருக்கிறார்?

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது புதிய நினைவுக்குறிப்பு நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey Of Love) என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார். அதில் தனது அரசியல் பயணம் மற்று... மேலும் பார்க்க

`சீன பெண் ஏஜென்ட்டுடன் திருமணம் மீறிய உறவு?'- ஆட்டம் கண்ட Nvidia தலைவரின் சாம்ராஜ்யம்; என்ன நடந்தது?

உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம... மேலும் பார்க்க