செய்திகள் :

'சந்திக்கும்போது முகத்தைத் திருப்பிக்கொள்வார்'- மோடியைப் பற்றி சோனியா காந்தி என்ன எழுதியிருக்கிறார்?

post image

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது புதிய நினைவுக்குறிப்பு நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey Of Love) என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார். அதில் தனது அரசியல் பயணம் மற்றும் தனது தனிப்பட்ட பயணம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் தனது புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்பு மற்றும் தொடர்பு குறித்து தெரிவித்துள்ள கருத்தில், “இன்றுவரை, அவருடன் எனக்கு நடைமுறையில் எந்தவிதமான உண்மையான தொடர்பும் இல்லை. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடையும் தருணங்களில், முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் வழக்கமாக சபாநாயகரின் அறையில் கூடும்போது, ​​நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.

அது மிகவும் சிறிய அறை, அங்கு பொதுவாகப் பலர் இருப்பார்கள். ஆனால், அவர் எனக்கு நேராக வரும்போது, ​​நாங்கள் ஒருவருக்கொருவர் முறைப்படியான நமஸ்தே தெரிவித்துக்கொள்வோம். அவர் பெரும்பாலும் பார்வையைத் திருப்பிக்கொள்வார். கண்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்துவிடுவார்.

நாடாளுமன்றத்தில் பேசும்போது, ​​பொதுக்கூட்டங்களில் பேசுவது போன்றே சில சமயங்களில் அவர் மிகவும் தரக்குறைவான மொழியைப் பயன்படுத்துகிறார். பெரும்பாலும், எதிர்க்கட்சியினரை அவர் கடுமையாகச் சாடுகிறார். அவரது இந்தச் செயலை ஒரு கடுமையான வசைமாரி என்றுதான் சொல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடனான தொடர்பு குறித்து கூறும் அவரைப் பற்றி வேறு மாதிரி குறிப்பிட்டுள்ளார். அவர் வாஜ்பாய் குறித்து தெரிவித்துள்ளதாவது: ''2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, ​​வாஜ்பாய் குறித்துதான் கவலைப்பட்டேன்.

தாக்குதல் நடந்தவுடன் எனக்கு முதலில் தோன்றியது பிரதமரின் பாதுகாப்பு குறித்த கவலைதான். எனவே, உடனடியாக அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தேன். நானும் அவரும் ஏறக்குறைய ஒரே நேரத்தில்தான் மக்களவையிலிருந்து வெளியேறினோம் என்றும், அவர் பாதுகாப்பாக வீட்டில்தான் இருக்கிறார் என்றும் அவர் கூறியபோது எனக்கு நிம்மதி ஏற்பட்டது. பின்னர், நான்தான் அவருக்கு முதலில் அழைப்பு விடுத்தேன் என்பதை அவர் தனது சக ஊழியர்களிடம் பாராட்டுடன் குறிப்பிட்டதாக அறிந்தேன்.

சில மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கவனித்தபோது, ​​பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குன்றி, மிகவும் முதுமையடைந்தவராகத் தெரிந்தார். அவரது கட்சியினரிடையே இது குறித்துப் பேச்சுகள் அடிபட்டன. விரைவில் ‘டைம்’ (Time) இதழில் அவரது உடல்நலக் குறைபாடுகள் குறித்த கட்டுரை ஒன்றும் வெளியானது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அந்தப் பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பேசும்போது நான் சற்று எல்லை மீறிவிட்டேனோ என்று தோன்றியது. அவர் ஒரு மூத்த தலைவர்.

நாங்கள் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், அவர் நாட்டின் பிரதமர். அவரை விமர்சிக்கும்போது நான் இன்னும் நிதானமாக இருந்திருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப் பச்சனின் பெயர் புத்தகத்தில் மூன்று முறை மட்டுமே வருகிறது. அவரது மனைவி ஜெயா பச்சன் பற்றி குறிப்பிடவே இல்லை.

அறுந்து போன அமிதாப் உறவு

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு அமிதாப் பச்சனுடனான ராஜீவ் காந்தி குடும்ப உறவு நின்று போனதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் சோனியா காந்தி, அமிதாப் பச்சனின் பெற்றோர்களான இந்தி கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் ஆகியோரைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர் 1968 இல் முதன்முதலில் இத்தாலியில் இருந்து இந்தியா வந்தபோது ஹரிவன்ஷ் ராய் பச்சன் வீட்டில் தங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டபோது தேஜி பச்சன் அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டார்.

மேலும், பிறந்த சில மணி நேரங்களிலேயே தனது முதல் மகனை இழந்த சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டி உட்பட, பல பரிசுகளைப் பல ஆண்டுகளாக வழங்கினார். டெல்லியில் சோனியா காந்தியின் ஆரம்ப நாட்களில், ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவருக்கு அவ்வப்போது இந்திப் பாடங்களையும், சிறந்த அறிவுரைகளையும் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆபாசக் குறுஞ்செய்தி? ``ஆட்சியரே புகார் அளித்தால்தான் நடவடிக்கையா?" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை. ஏராளமானோர் காணாமல் போகிறார்கள், குறிப்பாக குழந்தைகள் பலர் காணாமல் ... மேலும் பார்க்க

`சீன பெண் ஏஜென்ட்டுடன் திருமணம் மீறிய உறவு?'- ஆட்டம் கண்ட Nvidia தலைவரின் சாம்ராஜ்யம்; என்ன நடந்தது?

உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம... மேலும் பார்க்க

PIN Code-ல் தேவநாகரி எண்கள்? ``மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை எதிர்ப்போம்"- சு.வெங்கடேசன்

இந்திய அஞ்சல்துறையின் அஞ்சல் குறியீட்டு எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்கள் பயன்படுத்தப்பட்டதாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில்,... மேலும் பார்க்க

ஈரான் போருக்கு முக்கியமான Pete Hegseth! கார்னர் செய்யும் US நாடாளுமன்றம்; ட்ரம்ப் 'விடாப்பிடி' ஆதரவு

பீட் ஹெக்செத் - ஈரான் போரில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எவ்வளவு பங்குண்டோ, அதை விட ஒரு படி அதிகமாக இவருக்கு உண்டு. யார் இவர் என்று கேட்கிறீர்களா? இவர்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர்.ஈரான் போ... மேலும் பார்க்க

SIR: ``யாரையெல்லாம் பட்டியலிலிருந்து நீக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்" - டி.எம் கிருஷ்ணா

இந்தியாவின் மாபெரும் சிக்கலுக்குரிய விஷமாக மாறியிருப்பது எஸ்.ஐ.ஆர். எதிர்க்கட்சிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர். அதன் அடிப்படை... மேலும் பார்க்க

``TVK MLA அருள் விக்னேஷ் பாவம்... வதந்திகளை வைத்து கேள்வி எழுப்புவது சரியல்ல" - மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம், துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம் உள்ளிட்ட... மேலும் பார்க்க