செய்திகள் :

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு? "அஜித்பவார் இறந்ததும் முடிந்துவிட்டது" - சுப்ரியாவின் பதில் என்ன?

post image

முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான அணி உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் சரத்பவார் தலைமையிலான அணி தனி அணியாக செயல்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் அஜித்பவார் விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் அணியின் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அஜித்பவார் இறந்த பிறகு அந்தப் பேச்சுவார்த்தை தடைப்பட்டது.

தற்போது அப்பேச்சுவார்த்தை மீண்டும் சூடுபிடித்துள்ளது. அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவாரைச் சந்தித்து பேசினர். இது குறித்து சரத்பவாரோ சுனேத்ரா பவாரோ சரியான பதில் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

சுனேத்ரா பவார்

இப்பிரச்னை குறித்து சரத்பவார் மகள் சுப்ரியா சுலே அளித்த பேட்டியில், ''கட்சியின் இரு பிரிவுகளுக்கு இடையே சாத்தியமான இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள், தனது சகோதரரும் மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு முடிவுக்கு வந்துவிட்டது.

எனது சகோதரர் (அஜித் பவார்) உயிருடன் இருந்தவரை (கட்சியின் இரு பிரிவுகளின்) இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அவர் நம்மை விட்டுப் பிரிந்த அந்த நாள், அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது" என்று கூறினார்.

இது குறித்து அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் தட்கரே கூறுகையில், ''சரத் பவார் தலைமையிலான கட்சியுடன் இணைவது குறித்து தேசியவாத காங்கிரஸ் பரிசீலிக்கவில்லை. நரேந்திர மோடியின் தலைமையில் தீவிர பரிசீலனைக்குப் பிறகு நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து இருப்போம். சுனேத்ரா பவாரின் தலைமையிலான கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உறுதியாகத் தொடர்ந்து பயணிக்கும். கட்சிகளை இணைப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் நேரம் வரும் போது தெரிய வரும் என்று சுனேத்ரா பவார் தெரிவித்துள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

``சட்டமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தது" - திருநாவுக்கரசு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி எவ்வாறு திமுக ஆட்சியைக் கவிழ்த்ததோ, அதேபோல தவெக அரசையும் கவிழ்த்துவிடும். எனவே, தவெக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க-வின் தமிழகப் பொறுப்பாளர் ராம் மாதவ் கூறியிருந்தா... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பைப் பற்றிக் கவலையில்லை" - கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.... மேலும் பார்க்க

திருப்பதி: 'ஒரு கிலோ முடி ரூ.84 ஆயிரம்' - பக்தர்கள் செலுத்திய முடி ரூ.119 கோடிக்கு விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்பவர்கள் மொட்டை போட்டுக்கொள்வது வழக்கம். ஏழுமலையானைத் தரிசிக்க வருபவர்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் மொட்டை போட்டுக்கொள்கின்றனர். அவ்வாறு மொட்டை போட்டுக்கொள்பவர்கள... மேலும் பார்க்க

மீண்டும் ஒரு காவல் மரணம்: ``தவெக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது காவல்துறை" - டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் காவல் நிலையத்திலேயே உயிரிழந்த விவகாரம் விவாதமாகி... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய வழக்கு; கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம்; கரூர் போலீஸ் அதிரடி

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆத்தூர் புதூரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் தனது மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அப்போது, அவரது வீட்டிற... மேலும் பார்க்க

ஆபாச மெசேஜ் விவகாரம்: "மாவட்ட ஆட்சியர் மௌனம் கலைக்க வேண்டும்" - டாக்டர் கிருஷ்ணசாமி

"அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மௌனம் சாதிப்பது, தேவையற்ற விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி த... மேலும் பார்க்க