செய்திகள் :

ஆபாச மெசேஜ் விவகாரம்: "மாவட்ட ஆட்சியர் மௌனம் கலைக்க வேண்டும்" - டாக்டர் கிருஷ்ணசாமி

post image

"அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மௌனம் சாதிப்பது, தேவையற்ற விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து 10 நாட்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரிதும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், நிச்சயமாகச் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், 10 நாட்களுக்கு மேலாகியும், மாவட்ட ஆட்சியர் ஏன் மௌனம் காக்கிறார் என்பது தெரியவில்லை.

அவர் வெறும் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல, மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டும் ஆவார். ஒருவேளை அந்தச் சட்டமன்ற உறுப்பினர் தனக்குத் தவறான அல்லது ஆபாசமான, சட்டவிரோதமான செய்தியை அனுப்பியிருந்தால், அவரே பரிந்துரைத்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கான அத்தனை அதிகாரமும் அவரிடம் உண்டு.

அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்

இதற்காக அவர் காவல்துறையை அணுக வேண்டியதோ அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. இவ்வளவு அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர் மௌனம் சாதிப்பது, தேவையற்ற விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது.

இதை தனி நபருக்கான பிரச்னையாகக் கருதக் கூடாது. ஒரு மாவட்ட ஆட்சியர் என்பவர் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் தலைமை தாங்குபவர். அவருக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது என்றால், அது மக்களுக்கான பிரச்னையாகவே கருதப்பட வேண்டும். எனவே, அவர் தொடர்ந்து மௌனம் காப்பது சரியல்ல. இப்பிரச்னைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அவர் தனது மௌனத்தைக் கலைத்தால்தான், உண்மை என்ன என்பது நாட்டு மக்களுக்குத் தெரியவரும். இல்லையென்றால், ஊகங்களின் அடிப்படையில் யார்மீதாவது குற்றம் சாட்டுவதும் அல்லது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதும் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தனது மௌனத்தைக் கலைத்து, நடந்த சம்பவங்களின் உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தி, ஊகங்களின் அடிப்படையில் விவாதமாகி வரும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

காவிரி: `` தண்ணீர் தர மாட்டேன் என்கிற கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது?"- சீமான் காட்டம்

மைசூரில் நடந்த அரசு விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் பிரதமர் மோடி முன்னிலையில், `காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை... மேலும் பார்க்க

`எஃப்ஸ்டீனை, ஜெம் வீரமணியை பாவம் என விடமுடியுமா?" - மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதில்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான செல்வப்பெருந்தகை மலர் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவ... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தல்; தவெக அரசு மௌனம் காக்கிறது!" - TRB ராஜா

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.... மேலும் பார்க்க

மேகதாது: 'உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்'- முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (14-11-2026) முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கட... மேலும் பார்க்க

"மர்மமான வெளிநாட்டு நபர்" - சோனியா காந்தி குறித்து அவதூறாக பதிவிட்ட நடிகை கங்கனா மீது வழக்கு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குறித்து பாலிவுட் நடிகையும், ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மாண்டி தொகுதி மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்குறிய வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்... மேலும் பார்க்க

தீக்குளித்து காவல் நிலையம் நுழைந்த பெண்: ``என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?" - தமிழிசை சௌந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சாதிபதி. இவருக்கும் உரையூர் ஊராட்சி செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், ஊராட்சி செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ... மேலும் பார்க்க