செய்திகள் :

மதுரை : காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை; போலீஸார் சஸ்பெண்ட்!

post image

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சரக்கு வாகனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் 2-ம் தேதி அதிகாலை தேவரத்தில் இருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, வளந்தூர் கண்மாய் கரை அருகே அவரது வாகனத்தில் திடீரென தீப்பிடித்தாகவும் அப்போது வாகனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், வளந்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 113/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

புகாரளித்த 10 நாட்கள் கழித்து வழக்கின் விசாரணைக்காகவும், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காகவும் நேற்று இரவு 10.45 மணிக்கு பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லபட்டுள்ளார். அப்போது காவல் ஆய்வாளரின் அறையில் இருந்த அவர், கழிவறைக்குச் சென்றதாகவும், காலை சுமார் 6 மணியளவில் அங்கு தூக்கிட்ட நிலையில் மயக்கமடைந்து கிடந்ததாக சொல்லபடுகிறது.  

சித்தரிப்பு படம்
மதுரை; காவல்நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

இதையடுத்து உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காவல் நிலையத்துக்குள் புகார்தாரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், அன்றைய தினம் பணியில் இருந்த காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கினை சிபி-சிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெர்விக்க்பட்டுள்ளது.

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: இளைஞர் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை!

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைச் ச... மேலும் பார்க்க

திருச்சி: ரூ. 5 லட்சம் கடன் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி!- ரூ. 8 லட்சத்தை இழந்த பெண்

திருச்சியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த ஜூலை மாதம் 29 -ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் அவரை தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் நான் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவன... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: எஃப்.ஐ.ஆரில் அருண் ஐ.பி.எஸ் உட்பட 7 பேர் பெயர் சேர்ப்பு - பின்னணி என்ன?

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி. இவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி சாந்தி, அவரின் கணவர் மகேந்த... மேலும் பார்க்க

`குடி’மகன்களால் கடத்தப்பட்ட சிறுமிகள்! - அடுத்தடுத்த சம்பவங்களால் அதிரும் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமலதா மாயமாகி 30 நாட்களைக் கடந்தும், அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: அருண் ஐபிஎஸ் உட்பட 7 காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் சேர்ப்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அது தொடர்பான விவகாரங்களை விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரால் 24.09.2026 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைக... மேலும் பார்க்க

கரூர்: கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி; 12 வருடங்கள் கழித்து போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

கரூர், வெங்கமேடு ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்கிற அடைக்கலம் (வயது: 56), 2014 ஆம் ஆண்டு எஸ்தர் ராணி என்ற பெண்னுடன் முறை தவறிய நட்பில் இருந்து வந்துள்ளார். கரூர், செங்குந்தபுரத்தில் உள்ள ஒர... மேலும் பார்க்க