உங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேர்க்க மிகச் சிறந்த வழி எத...
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேர்க்க மிகச் சிறந்த வழி எது தெரியுமா?
நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்று நினைத்து நாம் பல வகையில் பணம் சேர்க்கிறோம். 'நாம் இருக்கிற வரை நமக்கு; நமக்குப்பின் நம் குழந்தைகளுக்கு...' என்று நினைத்து, வீடு வாங்குகிறோம். 'இப்போதே விலை அதிகம்; ஆனால், எதிர்காலத்தில் இன்னும் விலை அதிகரிக்கும். தவிர, மகளுக்கு நிச்சயம் வேண்டும்...' என்று நினைத்து, தங்கம் வாங்குகிறோம். இந்த இரண்டில் மட்டும்தான் நம் மக்களின் முழுக் கவனம் இருக்கிறது.
இந்த இரண்டு முதலீடுகளுமே மிகச் சரியானதுதான். ஆனால், மகனோ, மகளோ கல்லூரியில் படித்தபின், எங்கோ வேலை கிடைத்து, அங்கேயா செட்டில் ஆகும்போது, நாம் வாங்கிய வீடு அவர்களுக்கு எந்த வகையில் உதவும் என்பது முக்கியமான கேள்வி. அது மட்டுமல்ல, தங்கம் என்பது வருமானம் தராத சொத்து. அதன் விலை உயர்வதால் மட்டுமே லாபம் கிடைக்கிறது. தவிர, தங்க நகைகளை விற்க பலருக்கும் மனம் வராது; அதைப் பாதுகாப்பதும் கடினம். ஆனாலும், தங்க நகைகளைத்தான் நாம் தேடித் தேடிச் செல்கிறோம்.

ஆனால், பராமரிப்பதற்கும் எளிது; நீண்ட காலத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்; எப்போது வேண்டுமானாலும் பணமாக்கிக் கொள்ளலாம் என்கிற மாதிரி ஒரு முதலீடு இருந்தால், மிக நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு 100% ஏற்ற முதலீடுதான், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு. இன்று குழந்தைகள் தினம் என்பதால், உங்கள் குழந்தைகளின் பெயரில் ஆளுக்கு ஓர் எஸ்.ஐ.பி என ஆரம்பிப்பது நல்லது.
நீண்ட காலத்தில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்குவதால், என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்பவர்கள் இந்தப் புள்ளிவிவரங்களைப் பாருங்கள்...
கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 36 ஆண்டுகளில் தங்கம் 35 மடங்கு லாபம் தந்துள்ளது. வெள்ளி 25 மடங்கு லாபம் தந்துள்ளது. ஆனால், பங்குச் சந்தையானது 75 மடங்கு லாபம் தந்துள்ளது. இரட்டிப்பு லாபம் தந்த பங்குச் சந்தையை நாம் நம்ப மறுக்கிறோம். அதில் பாதி மட்டுமே லாபம் தரும் தங்கத்தை மலை அளவுக்கு நம்புகிறோம்.

மியூச்சுவல் ஃபண்டில் குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் பணம் சேர்க்க முடியுமா? நிச்சயம் முடியும். அப்பா அல்லது அம்மாவின் பெயரில் ஒரு முதலீட்டுக் கணக்கைத் தொடங்கி, குழந்தையை நாமினியாகச் சேர்க்கலாம். இதற்குக் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய ஆவணங்களைக் கூடுதலாகத் தந்தால் போதும்.
சரி, குழந்தையின் பெயரில் எவ்வளவு பணத்தைச் சேர்க்கலாம்? குறைந்தபட்சம் 100 ரூபாய் என்று தொடங்கி, 500 ரூபாய், 1000 ரூபாய் என உங்கள் திறனுக்கேற்ப பணத்தைச் சேர்க்கலாம். ஒருவர் வேலைக்குச் சேர்ந்தபிறகுதான் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யத் தொடங்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், குழந்தையின் முதல் பிறந்தநாள் அன்றே முதலீடு செய்யத் தொடங்கலாம் என்பதுதான் உண்மை. குழந்தைகளுக்காக தங்க நகை வாங்கி வைப்பதைப் போலத்தான், அவர்களுக்கு எஸ்.ஐ.பி மூலம்
முதலீடு செய்யத் தொடங்குவது. அப்படி முதலீடு செய்து பணம் சேர்க்கத் தொடங்கினால், எவ்வளவு பணம் சேர்க்கலாம் தெரியுமா?

மாதந்தோறும் 500 ரூபாய் என்கிற அளவில் 10 ஆண்டுகளுக்கு சேர்த்தால், 1.12 லட்சம் ரூபாய் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். மாதந்தோறும் 1000 ரூபாய் என 10 ஆண்டுகள் சேர்த்தால், 2.24 லட்சம் திரும்பக் கிடைக்கும். மாதந்தோறும் 1000 ரூபாய் என 20 ஆண்டுகள் சேர்த்தால், 9.19 லட்சம் ரூபாய் திரும்பக் கிடைக்கும். 30 ஆண்டுகள் சேர்த்தால், 30.80 லட்சம் சேர்க்க முடியும். 40 ஆண்டுகள் சேர்த்தால், 97.93 லட்சம் சேர்க்க முடியும். 50 ஆண்டுகள் சேர்த்தால், 3.06 கோடி கிடைக்கும்!
குழந்தைகளின் முதலாம் ஆண்டு முதலே எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கிவிடுவதால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு எளிதாகத் தொடரலாம். முதல் 20 ஆண்டுகள் பெற்றோர்கள், அடுத்த 30 ஆண்டுகளுக்கு மகனோ/மகளோ அந்த முதலீட்டைத் தொடரலாம்!

இந்தக் கட்டுரையைப் படித்தபின், எஸ்.ஐ.பி முதலீடு தவறானது; இதில் நஷ்டமே வரும் என்றெல்லாம் சொல்வார்கள். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டில் முதல் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நஷ்டம் வரலாம். ஆனால், ஒருவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், லாபத்துக்கு வந்துவிடுவார். 5, 10, 15, 20 எனப் பல ஆண்டுகள் தொடர்ந்து மிகப் பெரிய அளவில் பணம் சேர்ப்பது உறுதி!
இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு உங்கள் குழந்தையின் எதிர்காலத் தேவைக்கானப் பணத்தைக் குழந்தைகள் தினமாகிய இன்றே சேர்க்கத் தொடங்குங்கள்! உங்கள் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தை தின வாழ்த்துகள்!
எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்க வேண்டுமா?
மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
ஏ.ஆர்.குமார் - 89259 44568
சபரிநாதன் - 89259 44569
தங்கலட்சுமி - 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!
Vikatan Wealth Pvt Ltd



















