கரூர்: 'சஷ்டி நாளில் கிடா வெட்ட முடிவு செய்துள்ளார்கள்; தடுக்க வேண்டும்!'- எஸ்....
கரூர்: போக்ஸோ வழக்கில் சிக்கிய குற்றவாளி; 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
கரூர் அருகே உள்ள வெங்கமேடு காவல் சரக்குக்கு உட்பட்ட ஒரு பகுதியில், சிறுமிக்கு அருகம்பாளையம், வையாபுரி கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்த வேலுசாமி (56) என்ற முதியவர் , சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகாரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2026, மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்து வேலுசாமியை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கில், கரூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாத காலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி தங்கவேல், குற்றவாளி வேலுசாமிக்கு பாலியல் குற்றம் செய்ததற்காக ஐந்தாண்டுகள் மெய்க்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் முறையாக ஆஜர்ப்படுத்தி எதிரிக்கு சிறை தண்டனை பெற்றுத்தந்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற பெண் காவலர் ஆகியோரை கரூர் மாவட்ட எஸ்.பி ரகுபதி பாராட்டினார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஆறே மாதத்தில் கரூர் மகளிர் நீதிமன்றம் விரைவாக விசாரணை செய்து குற்றவாளிக்கு கடும் தண்டனை விதித்திருப்பது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சமூக நல செயல்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் குழந்தைகள் தங்கள் புகார்களை கட்டணமில்லா 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தொலைபேசி 1098/ 112 என்ற எண் மூலம் புகார் தெரிவிக்கவும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





















