செய்திகள் :

கரூர்: சாலை விபத்தில் பலியான இளைஞர்; உடல் உறுப்புகளை தானம் செய்து நெகிழ வைத்த மனைவி

post image

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி கிராமம், சங்கரம்பாளையம் என்ற முகவரியைச் சேர்ந்த துரைசாமி - ருக்குமணி தம்பதியரின் மகன் சிவசந்துரு(வயது: 32). இவர், கடந்த 7 -ம் தேதியன்று ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். சாலை விபத்தில் இறந்தவருக்கு வினோதினி என்ற மனைவியும் (25) மற்றும் யாழினி ( 2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவ விதிமுறைகளின்படி தானமாகப் பெறப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த மூன்று நோயாளிகளுக்கு மறுவாழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு சிறுநீரகம் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. விபத்தில் இறந்தபின் அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவசந்துருவின் இறுதி சடங்கு மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி கிராமம், சங்கரன்பாளையம் ஊர் மயானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் கரூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் மண்மங்கலம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்துறை அரசு அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

உயிரிழந்தவர்

அதோடு, இந்த நெகிழ்வான சம்பவம் குறித்து, 'இந்த துயரமான சூழ்நிலையிலும் மனிதநேயத்துடன் செயல்பட்டு, தங்களது குடும்ப உறுப்பினரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரின் செயல் பாராட்டுக்குரியது. அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஒருவரின் உயிரிழப்பு பலரின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது' என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசன்னா ராமசாமி தனது இரங்கல் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இளம் வயதில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினரின் மனிதநேயமிக்க செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

`கிராமப்புற இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்' - பங்கர் ராய் காலமானார்

பங்கர் ராய், கிராமப்புற மக்களின் தன்னிறைவுக்காக உருவாக்கப்பட்ட 'பேர்ஃபுட் காலேஜ்' (Barefoot College) நிறுவனத்தின் நிறுவனர்.முறையான பள்ளிப் படிப்பு இல்லாத கிராமப்புற மக்களை சூரிய ஒளி பொறியாளர்கள் (Sola... மேலும் பார்க்க

தென்காசி: சாலையில் கிடந்த 30 சவரன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்குக் குவியும் பாராட்டு

ஏழை விவசாயியான பாப்பையா என்பவர், சாலையில் நடந்து சென்றபோது, ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில், நகை மற்றும் பணம் இருந்துள்ளன. அவற்றை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் காவல் நிலையத்துக்கு ந... மேலும் பார்க்க

நெல்லை: `நான் சொல்ற இடத்துக்கு போயிட்டு வாங்க' - ஹெல்மெட் அணியாத SI ; நூதன தண்டனை வழங்கிய டி.ஐ.ஜி!

இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்குபவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தலையில் காயம் ஏற்படுகிறது. இதில், 40 சதவிகிதம் பேர் உயிழப்பதாக தெரியவந்துள்ளது. ஹெல்மெட் அணிந்து பயணித்தால் சிறிய காயங்களுடன் உயிர்தப்... மேலும் பார்க்க

கொண்டாட்டம் நமக்கு… கழிவுகளை அகற்றும் சுமை இவர்களுக்கு! பிரித்துக் கொடுப்போம், பாரம் குறைப்போம்

ததீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் எனப் பலருக்கும் கொண்டாட்டம்தான்.ஆனால், அந்தக் கொண்டாட்டம் முடிந்த பிறகு வீதிகளில் தேங்கும் பட்டாசுக் கழிவுகளையும் மற்ற குப்பைகளையும் அகற்ற வேண்டிய பொற... மேலும் பார்க்க

`எங்கள் கொண்டாட்டம் கொஞ்சம் தாமதமாகத்தான்..'- நம் தீபாவளிக்கு பின்னால் இயங்கும் ஓய்வில்லா மனிதர்கள்!

நம் தீபாவளிக்குப் பின்னால்.. ஓய்வில்லாத மனிதர்கள்!தீபாவளி அன்று அதிகாலையில் எழுவது நமக்கு ஒரு கொண்டாட்டம். ஆனால், சிலருக்கு அதுவே வேலை நேரம்! நாம் வெடிக்கும் பட்டாசுகளின் சத்தத்துக்கு நடுவே நாளிதழ் வி... மேலும் பார்க்க

நெல்லை: குடும்பத்தின் வருகை; புத்தாடை, இனிப்பு – காப்பகத்தில் நெகிழ்ச்சியான தீபாவளி!

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், குடும்பத்தினருடன் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால், குடும்பத்தைப் பிரிந்து காப்பகத்தில் வசிப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியை அனுபவ... மேலும் பார்க்க